தமிழகத்தின் முன்னணி நடிகரும் தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவருமான விஜயின் அரசியல் பயணத்திற்கு பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ வாழ்த்து தெரிவித்துள்ளார்.
தனக்கு மிகவும் பிடித்தமான நடிகர் விஜய் என்று கூறியுள்ள அவர் அவரது சினிமா வாழ்விற்கு விடைகொடுத்து அரசியலில் பிரவேசிப்பதையிட்டு தான் மகிழ்ச்சியடைவதாகவும் அவரின் எதிர்கால அரசியல் முயற்சிகளுக்கு வாழ்த்து தெரிவிப்பதாகவும் நாமல் ராஜபக்ஷ தனது சமூக வலைத்தள பக்கங்களில் பதிவிட்டுள்ளார்.
நேற்றைய தினம் மலேசியாவில் இடம்பெற்ற ஜனநாயகன் திரைப்படத்தின் இசை வௌியீட்டு விழாவின் போது நடிகர் விஜய்க்கி கிடைத்த ஆரவாரமான வரவேற்பை மெச்சியே நாமல் எம்.பி இவ்வாறு பாராட்டு தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

