19.6 C
Scarborough

தைவான் சர்வதேச தடகளப் போட்டி: 400 மீ. தடை ஓட்​டத்​தில் வித்யா ராம்ராஜ் முதலிடம்!

Must read

சீன தைபே: தை​வான் ஓபன் சர்​வ​தேச தடகளப் போட்​டி​யில் இந்​திய வீராங்​கனை வித்யா ராம்​ராஜ் 400 மீட்​டர் தடை ஓட்​டத்​தில் தங்​கம் வென்​றார். இந்​தப் போட்​டி​யில் ஒரே நாளில் இந்​திய வீரர், வீராங்​க​னை​கள் 5 தங்​கப் பதக்​கம் வென்​றனர்.

தைவான் தடகள ஓபன் போட்​டிகள் சீன தைபே நகரில் நேற்று முன்​தினம் தொடங்​கின. முதல் நாள் போட்​டி​யில் இந்​தி​யா​வுக்கு 6 தங்​கப் பதக்​கங்​கள் கிடைத்​தன.

100 மீட்​டர் மகளிர் தடை ஓட்ட போட்​டி​யில் நடப்பு ஆசிய சாம்​பியனும் இந்​திய வீராங்​க​னை​யு​மான ஜோதி யர்​ராஜி 12.99 விநாடிகளில் பந்தய இலக்கை கடந்து முதலிடம் பிடித்து தங்​கம் வென்​றார்.

மகளிருக்​கான 1,500 மீட்​டர் ஓட்​டப்​பந்​த​யத்​தில் இந்​திய வீராங்​கனை பூஜா பந்தய தூரத்தை 4.11.65 விநாடிகளில் கடந்து தங்​கப்​ப​தக்​கத்​தைத் தட்​டிச் சென்​றார். மகளிருக்​கான 100 மீட்​டர் தொடர் ஓட்​டத்​தில் இந்​தி​யா​வின் சுதீக்சா வத்​லூரி, அபிநயா ராஜ​ராஜன், சிநேகா எஸ்​எஸ், நித்யா காந்தே ஆகியோர் அடங்​கிய அணி முதலிடம் பிடித்து தங்​கம் வென்​றது.

ஆடவருக்​கான 100 மீட்​டர் தொடர் ஓட்​டத்​தில் இந்​தி​யா​வின் குரீந்​தர்​வீர் சிங், அனிமேஷ் குஜுர், மணி​கண்டா ஹாப்​லி​தார், ஆம்​லான் போர்​கோஹெய்ன் ஆகியோர் அடங்​கியஅணி முதலிடத்​தைப் பெற்று தங்​கப் பதக்​கத்​தைக் கைப்​பற்​றியது.

ஆடவருக்​கான மும்​முறை தாண்​டு​தலில் முன்​னாள் ஆசிய சாம்​பிய​னான அப்​துல்லா அபுபக்​கர் தங்​கத்​தைக் கைப்​பற்​றி​னார். ஆடவருக்​கான 110 மீட்​டர் தடை தாண்​டும் ஓட்​டத்​தில் இந்​தி​யா​வின் தேஜஸ் சிர்சே தங்​கம் வென்​றார். இதன்​மூலம் முதல் நாளி​லேயே இந்​தி​யா,6 தங்​கம் வென்று அசத்​தி​யது. இந்​நிலை​யில் நேற்று 2-ம் நாள் போட்​டிகள் நடை​பெற்​றன. 2-ம் நாளில் இந்​திய வீரர், வீராங்​க​னை​கள் 5 தங்​கப் பதக்​கங்​களைக் கைப்​பற்​றினர். ஆடவர் 400 மீட்​டர் தடை ஓட்​டத்​தில் இந்​திய வீரர் யஷஸ் பலாக்சா 42.2 விநாடிகளில் ஓடிவந்து வெள்ளி வென்​றார்.

மகளிர் 400 மீட்​டர் தடை ஓட்​டத்​தில் இந்​திய வீராங்​கனை வித்யா ராம்​ராஜ் 56.53 விநாடிகளில் ஓடி வந்து முதலிடம் பிடித்து தங்​கம் வென்​றார். வித்யா ராம்​ராஜ், தமிழகத்​தைச் சேர்ந்​தவர் என்​பது குறிப்​பிடத்​தக்​கது. இதற்கு முன்பு நடை​பெற்ற பெடரேஷன் கோப்பை போட்​டி​யில் இதே பிரி​வில் 56.04 விநாடிகளி​லும், ஆசிய சாம்​பியன்​ஷிப் இறு​திப் போட்​டி​யில் 56.46 விநாடிகளி​லும் பந்தய தூரத்​தைக் கடந்துவந்​திருந்​தார் வித்யா ராம்​ராஜ்.

இதே​போல், ஆடவர் ஈட்டி எறிதலில் இந்​திய வீரர் ரோஹித் யாதவ் 74.42 மீட்​டர் தூரம் எறிந்து தங்​கம் வென்​றார். மகளிர் 800 மீட்​டர் போட்​டி​யில் இந்​திய வீராங்​கனை பூஜா 2:02:79 விநாடிகளில் ஓடிவந்து முதலிடத்​தைப் பிடித்து தங்​கத்​தைக் கைப்​பற்​றி​னார். இந்​திய வீராங்​கனை ட்விங்​கிள் சவுத்ரி2:06.96 விநாடிகளில் ஓடி வந்து 2-ம் இடம் பிடித்து வெள்​ளியை வென்​றார்.

ஆடவர் 800 மீட்​டர் பிரி​வில்​இந்​திய வீரர் கிருஷண் குமார் 1:48.46 விநாடிகளில் பந்தய தூரத்​தைக் கடந்து முதலிடம் பிடித்​தார். மகளிர் ஈட்டி எறிதல் போட்​டி​யில் இந்​திய வீராங்​கனை அன்னு ராணி 56.82 மீட்​டர் தூரத்​துக்கு ஈட்​டியை எறிந்து முதலிடம் பிடித்​தார். இதன்​மூலம் அவர் தங்​கப் பதக்​கத்​தைத் தட்​டிச் சென்​றார். இலங்கை வீராங்​கனை ஹடா​ரா​பாகே லேகமலேகே 2-வது இடத்​தை​யும், சீன தைபே வீராங்​கனை பின்​-சுன் சு 3-வது இடத்​தை​யும் பிடித்​தனர்.

மகளிர் நீளம் தாண்​டு​தல் போட்​டி​யில் இந்​திய வீராங்​கனை ஷைலி சிங் 6.41 மீட்​டர் தூரம் தாண்டி வெள்ளி வென்​றார். இதே பிரி​வில் ஆஸ்​திரேலிய வீராங்​கனை டெல்டா அமிட்​சோவ்​ஸ்கி (6.49 மீட்​டர்) தங்​க​மும், மற்​றொரு இந்​திய வீராங்​கனை அன்சி சோஜன் (6.39 மீட்​டர்) வெண்​கல​மும் வென்​றனர். கடைசி நாளில் மட்​டும் இந்​திய வீரர்​, வீராங்​க​னை​கள்​ 5 தங்​கப்​ பதக்​கங்​களை வென்​றனர்​ என்​பது குறிப்​பிடத்​தக்​கது.

More articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest article