3.5 C
Scarborough

தையிட்டியில் விகாரைக்காக அபகரிக்கப்பட்டது தமிழ் மக்களின் காணி!

Must read

தையிட்டியில் அமைக்கப்பட்டுள்ள திஸ்ஸ விகாரை காணி, காங்கேசன் துறையிலுள்ள மக்களுக்கு சொந்தமானதாகும் என நாகதீபம் ரஜமகா விகாரையின் விகாராதிபதி நவதகல பதும தேரர் தெரிவித்துள்ளார்.

தையிட்டி திஸ்ஸ விகாரை தொடபில் கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.

தொடர்ந்து பேசிய அவர், தையிட்டியில் தற்போது அமைக்கப்பட்டிருக்கும் விகாரைக்கு அருகிலே உண்மையான திஸ்ஸ விகாரை அமைந்துள்ளது. அது நாகதீபம் ரஜமா விகாரைக்கு சொந்தமானதாகும்.

யுத்தம் நடைபெற்ற காலத்தில் பொது மக்களின் காணியை அடாவடியாக பிடித்து சட்டவிரோதமாக அமைக்கப்பட்டதாகும். யுத்த காலத்தில் இருந்து இங்கு வாழ்ந்து வரும் எனக்கு தான் இது தொடர்பில் நன்றாக தெரியும்.

பெறும்பான்மை மக்கள் குழப்பமடைய தேவையில்லை. இது தொடர்பில் ஆராய்ந்து பார்த்த செயற்பட வேண்டும். இதற்கு மேலும் உரமூட்டுவதாக,மகாநாயக்கர்கள் சட்டவிரோத திஸ்ஸ விகாரியின் தேரருக்கு வடக்கு மாகாண சங்கநாயக்க தேரர் பதவி வழங்கப்பட்டுள்ளது.

இவர் பௌத்த தேரர் பதவிக்கு வந்து 10 வருடங்கள் கடந்துள்ள நிலையில் இந்த பதவி வழங்குவது பௌத்த மதத்திற்கு விரோதமானது. நாங்கள் நாகதீபம் ரஜமா விகாரையில் 53 வருடங்களாக தமிழ் மக்களுடன் சாந்தி சமாதானத்துடன் வாழ்ந்து வருகிறோம்.

இங்குள்ள தமிழ் சகோதரர்களுக்கு தெரியும். இங்கு புதிய தேரர்கள் வந்து மக்களின் காணிகளை அடாவடியாக பிடித்துக் கொண்டு விகாரைகளை அமைத்து வருகின்றனர். இதற்கு மகாநாயக்கர்களின் உதவியும் கிடைக்கிறது.

தமிழ் மக்களை சாதானமாக வாழும் மக்களாகவே நான் பார்க்கிறேன். அப்படியில்லா விட்டால் என்னால் இங்கு இவ்வளவு நாள் இருக்க முடியாது. அரசாங்கம் இது தொடர்பில் தலையிட்டு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே எனது எதிர்ப்பாகும் என்று குறிப்பிட்டுள்ளார்.

More articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest article