13.5 C
Scarborough

யுகம் உள்ளிட்ட தெற்காசிய இனக் குழுமங்களைப் பிரதிநிதித்துவப்படுத்தும் ஊடகங்களுக்கு பாராட்டு

Must read

கனடாவின் ஒன்ரோரியா மாகாணத்தை மையமாகக் கொண்டு இயங்கிவரும் தெற்காசிய குழுமங்களைப் பிரதிநிதித்துவப்படுத்தும் ஊடகங்களைப் பாராட்டும் (South Asian Media Appreciation) நிகழ்வொன்று Queenspark பாராளுமன்றக் கட்டிடத் தொகுதியில் இன்று வியாழ்க்கிழமை நடைபெற்றது.

இதில் கனடாவின் வீடமைத்துறை அமைச்சர் விஜய் தனிகாசலம், முதியோருக்கான அமைச்சர் ரேமன் ஷோ, பல்லினக் கலாசார அமைச்சர் உள்ளிட்ட பல முக்கிய அமைச்சர்களும், பாராளுமன்ற உறுப்பினர் பீரிமயர் டக்போர்ட் உள்ளிட்ட பலரும் கலந்துகொண்டனர்.

இதில் தமிழ் மொழி ஊடகங்களுடன் தெற்காசிய நாடுகளைச் சேர்ந்த ஏனைய மொழி ஊடகவியலாளர்களும் இந்த நிகழ்வில் பங்கெடுத்தனர்.

கனடாவில் 110 இனங்கள் வாழ்வதாகவும், சுமார் 200 மொழி பேசுவோர் இந்த மாகாணத்தில் இருப்பதாகவும், இவர்கள் அனைவரும் இந்த மாகாணம் வரவேற்பதாகவும் இந்த மக்களிடையே ஊடகங்கள் மிகப் பெரிய பங்காற்றி வருவதாகவும் பாராளுமன்ற உறுப்பினர் டக்போர் தெரிவித்தார்.

இந்தச் சந்திப்பில் யுகம் வானொலியின் ஸ்தாபகத் தலைவர் கணபதி ரவீந்திரன் தம்பதிகளுக்கும் அழைப்பு விடுக்கப்பட்டு, பாராட்டப்பட்டமை விசேட அம்சமாகும்.

More articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest article