அமெரிக்காவில் கடந்த 2004-முதல் 2007-ம் ஆண்டு வரை மூன்று சீசன்களாக வெளியான சின்னத்திரை தொடர், ‘நெட்’ஸ்டிகிளாசிஃபைட் ஸ்கூல் சர்வைவல் கைடு’.
இதில் மார்ட்டின் என்ற கேரக்டரில் நடித்து ரசிகர்களின் அன்பைப் பெற்றவர் டெய்லர் சேஸ். பின்னர் ‘எவ்ரிபடி ஹேட்ஸ் கிறிஸ்’ என்ற நகைச்சுவைத் தொடரிலும் தோன்றிய அவர், 2007-ம் ஆண்டு ஜேம்ஸ் பிராங்கோவின் ‘குட் டைம் மேக்ஸ்’ என்ற ஹாலிவுட் படம் மூலம் சினிமாவிலும் அறிமுகமானார். அதில் யங் ஆடமாக நடித்திருந்தார். கடைசியாக ‘லா நோயர்’ என்ற வீடியோ கேமில் பணியாற்றினார்.

