19.6 C
Scarborough

தீப்பொறி பறக்க தரையிறங்கிய கனடா விமானம்!

Must read

எயார் கனடா விமானம் கியர் செயலிழப்பால் ஆபத்தான முறையில் ஹாலிபாக்ஸ் விமான நிலையத்தில் தரையிறங்கிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,

பிஏஎல் ஏர்லைன்ஸ் நிறுவனம் இயக்கும் எயார் கனடா 2259 விமானம் கனடாவின் செயின்ட் ஜான்ஸில் இருந்து ஹாலி பாக்ஸுக்கு பயணிகளுடன் இன்று [29-12- வந்துகொண்டிருந்தது.

இந்நிலையில், தரையிறங்கும் கியர் செயலிழந்ததால் ஹாலிஃபாக்ஸ் விமான நிலையத்தில் விமான ரெக்கைகள் தரையில் உரசி தீப்பொறி பறக்க ஓடுபாதையில் சறுக்கியபடி தரையிறக்கப்பட்டுள்ளது.

சம்பவத்தின் போது எடுக்கப்பட்ட வீடியோ காட்சிகள், விமானத்தின் இறக்கைகள் ஓடுபாதை மேற்பரப்புடன் உரசுவதை காட்டுகிறது.

இதன் விளைவாக எஞ்சின் பகுதி தீப்பற்றியுள்ளது. முதற்கட்ட தகவலின்படி, அதிஷ்டவசமாக பயணிகள் அல்லது பணியாளர்களிடையே எந்த உயிரிழப்பும், காயமும் இல்லை என்று தெரியவந்துள்ளது.

 

More articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest article