22.5 C
Scarborough

திட்டமிட்டபடி பணயக்கைதிகளை விடுவிப்போம் : ஹமாஸ் அறிவிப்பு

Must read

இஸ்ரேல் – ஹமாஸ் போர் நிறுத்தத்தின் முதற்கட்டமாக 6 வாரங்களில் (42 நாட்கள்) 33 பணயக் கைதிகளை விடுதலை செய்ய ஹமாஸ் ஒப்புக்கொண்டது. அதன்படி 33 பணய கைதிகளுக்கு ஈடாக தங்கள் நாட்டுச் சிறைகளில் உள்ள பலஸ்தீனர்களில் 1,904 பேரை விடுதலை செய்ய இஸ்ரேலும் ஒப்புக்கொண்டுள்ளது.

இதன்படி இதுவரை இஸ்ரேலிய பணய கைதிகளில் 16 பேரை ஹமாஸ் விடுதலை செய்துள்ளது. அதற்கு ஈடாக தற்போதுவரை 480க்கும் மேற்பட்ட பலஸ்தீன பணயக்கைதிகளை இஸ்ரேல் விடுதலை செய்துள்ளது.

இந்நிலையில் , காஸாவிற்குள் கூடாரங்கள் மற்றும் தங்குமிடங்களை இஸ்ரேல் அனுமதிக்கவில்லை எனவும், போர்நிறுத்த விதிமீறலில் இஸ்ரேல் ஈடுபட்டதாகக் குற்றம்சாட்டி, இஸ்ரேலிய பணயக்கைதிகளின் விடுதலையில் தாமதத்தை ஏற்படுத்தப்போவதாக ஹமாஸ் தெரிவித்திருந்தது.

அதே சமயம், ட்ரம்ப்பின் ஆதரவுடன், பணயக்கைதிகள் விடுவிக்கப்படாவிட்டால் மீண்டும் தாக்குதலை தொடங்குவோம் என இஸ்ரேல் அச்சுறுத்தியது.

இந்த நிலையில், திட்டமிட்டபடி வருகின்ற சனிக்கிழமை (15) 3 இஸ்ரேலிய பணயக்கைதிகளை விடுவிக்கவுள்ளதாக ஹமாஸ் தெரிவித்துள்ளது.

இது தொடர்பாக இஸ்ரேல் தரப்பில் இருந்து இதுவரை எந்த அறிவிப்பும் வெளியிடப்படவில்லை. ஹமாஸ் அமைப்பின் இந்த அறிவிப்பின் மூலம் காஸாவில் போர்நிறுத்தத்திற்கு பாதிப்பு ஏற்படாது எனவும் எதிர்பார்க்கப்படுகிறது.

 

More articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest article