தாய்வான் நாட்டில் சுமார் 1,20,000 பச்சைப் பேரோந்தி பல்லிகளை கொல்வதற்கு அந்நாட்டு அரசு திட்டமிட்டுள்ளது.
மத்திய அமெரிக்கா மற்றும் கரீபியன் பகுதிகளை பூர்வீகமாக கொண்ட பச்சை இகுவானா என்றழைக்கப்படும் பச்சைப் பேரேந்தி பல்லிகள், தாய்வானின் மத்திய மற்றும் தெற்கு மாகாணங்களில் சுமார் 2,00,000க்கும் அதிகமான எண்ணிக்கையில் வாழ்வதாகக் கூறப்படுகிறது.
உள்நாட்டில் மேற்கொள்ளப்படும் விவசாயத்தை அதிகமாக சார்ந்துள்ள தீவு நாடான தாய்வானில், இந்த பச்சைப் பேரோந்திகளின் எண்ணிக்கை அதிகரிப்பதனால் அந்நாட்டின் விவசாயம் பெரிதும் பாதிப்பிற்குள்ளாகின்றது.
கடந்த 2024 ஆம் ஆண்டில் மட்டும் இதற்காக பணியமர்த்தப்பட்ட சிறப்பு வேட்டைக் குழுவினர் சுமார் 70,000 பச்சைப் பேரோந்திகளை கொன்றனர். கொல்லப்படும் ஒவ்வொரு பேரோந்திக்கும் தலா 15 டொலர்கள் சன்மானமாக வழங்கப்பட்டது.
இதனைத் தொடர்ந்து, இந்த வருடம் (2025) சுமார் 1,20,000 பேரோந்திகளை கொல்ல திட்டமிடப்பட்டுள்ள நிலையில் அதற்காக தற்போது அந்நாட்டின் பொதுமக்களின் உதவியை அரசாங்கம் நாடியுள்ளது.