Nova Scotia வில் ஓர் pilot project உடன் தனிப்பட்ட உரிமையாளர்களிடமிருந்து தாக்குதல் பாணியிலான துப்பாக்கிகளை திரும்பப் பெற மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. இதன்படி துப்பாக்கி உரிமையாளர்கள் October 1 முதல் தங்கள் ஆர்வத்தை உறுதிப்படுத்த விரும்புவோர் website இனை அணுகலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.
நாடு முழுவதும் தொடங்கப்படுவதற்கு முன்னர் அது சீராக இயங்குவதை உறுதி செய்வதற்காக Cape Breton தீவில் தேர்ந்தெடுக்கப்பட்ட பகுதிகளில் தகுதியான துப்பாக்கி உரிமையாளர்களுக்கு இந்த சோதனைத் திட்டம் திறந்திருக்கும்.
பங்கேற்பாளர்கள் உரிமம் பெற்ற துப்பாக்கி உள்ளவர்களைப் பயன்படுத்தி தங்கள் துப்பாக்கியை செயலிழக்கச் செய்யலாம் அல்லது அதனை பொலிஸாரிடம் திருப்பி ஒப்படைக்கலாம். அண்மையில் Anandasangaree துப்பாக்கிகளைத் திரும்பப் பெறும் இந்த முயற்சிக்காக Ottawa, $700 மில்லியனுக்கும் அதிகமான பணத்தை வரவுசெலத்திட்டத்தில் ஒதுக்கியுள்ளதாகக் கூறினார்.
தடைசெய்யப்பட்ட துப்பாக்கிகளை திரும்பப் பெறும் திட்டமானது உரிமையாளர்களுக்கு அவர்களின் சட்டவிரோத துப்பாக்கிகளுக்கு நியாயமான இழப்பீட்டை வழங்கும் என்று அரசாங்கம் கூறுகிறது. தடைசெய்யப்பட்ட துப்பாக்கிகளின் உரிமையாளர்கள் தங்கள் துப்பாக்கிகளை ஒப்படைக்கும்போது அல்லது செயலிழக்கச் செய்யும்போது குற்றவியல் பொறுப்பிலிருந்து பாதுகாப்பதற்கான பொது மன்னிப்பு காலத்தையும் அரசாங்கம் அறிவித்துள்ளது.
எனினும், துப்பாக்கி உரிமையாளர்களும் அவர்களது ஆதரவாளர்களும், Conservative களும் இந்த திட்டத்தை விமர்சித்து, இது சட்டத்தை மதிக்கும் துப்பாக்கி உரிமையாளர்களை இலக்காகக் கொண்ட வரி செலுத்துவோர் பணத்தை மோசமாகப் பயன்படுத்தும் செயல் என விவரித்துள்ளனர்.

