3.4 C
Scarborough

தமிழில் ராப் இசைக்கு பெரிய வரலாறு உள்ளது – ஹரிஷ் கல்யாண்

Must read

பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு அதன் பின் படிப்படியாக படங்களில் நடிக்க தொடங்கி தற்போது பிரபல நடிகராக வலம் வருகிறார் ஹரிஷ் கல்யாண். இவர் நடிப்பில் வெளியான ‘பார்க்கிங்’ மற்றும் ‘லப்பர் பந்து’ திரைப்படங்கள் இவருக்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று கொடுத்தது. அவரது ‘டீசல்’ படம் கலவையான விமர்சனங்களையே பெற்றது.

‘லிப்ட்’ பட இயக்குனர் வினீத் வரபிரசாத் இயக்கத்தில் ஹரிஷ் கல்யாண் தனது 15வது படத்தில் நடித்து வருகிறார்.இப்படத்தில் நாயகனாக ஹரிஷ் கல்யாணும் நாயகியாக பிரீத்தி முகுந்தனும் நடிக்கின்றனர். இப்படத்தின் படப்பிடிப்பு நடைபெற்று வருகிறது. திங்க் ஸ்டுடியோஸ், இடா புரொடக்‌ஷன்ஸ் இணைந்து தயாரிக்கிறது.

வட சென்னையின் பின்னணியில், ராப் இசைக் கலையை மையமாக வைத்து இப்படத்தினை உருவாக்கியுள்ளது படக்குழு. இதன் படப்பிடிப்பு முழுமையாக முடிவுற்று, இறுதிகட்டப் பணிகள் மும்முரமாக நடைபெற்று வருகிறது.

‘தாஷமக்கான்’ படத்தின் புரோமோ வெளியீட்டு நிகழ்ச்சி சென்னையில் நடைபெற்றது. இதில் படக்குழுவினர் மட்டுமே கலந்துக் கொண்டனர். இந்த நிகழ்வில் ஹரிஷ் கல்யாண் பேசிய போது, “தாஷமக்கான் பற்றி நாம் கேள்விப்பட்டிருப்போம், தமிழ்நாட்டிற்கு கறி சப்ளை செய்யும் இடம் தான் தாஷமக்கான். நான் இப்படத்தில் ராப்பராக நடித்துள்ளேன். தமிழில் ராப் இசைக்கு பெரிய வரலாறு உள்ளது. பலர் இதற்கு முன் ராப் இசையில் கலக்கியுள்ளனர். இண்டி மியூசிக்கிலும் பலர் கலக்கி வருகின்றனர். எனக்கு அவர்கள் எல்லோரும் தான் இன்ஸ்பிரேஷன். என்னுடன் நடித்த ராப்பர்ஸ் அனைவருக்கும் நன்றி.

இந்த மாதிரி திறமையாளர்களை அடையாளப்படுத்திய இயக்குநருக்கு நன்றி. இசை இந்தப்படத்தில் மிக முக்கியம். பிரிட்டோ கலக்கியுள்ளார். ராப், பேட்டில் இசை, ரொமான்ஸ் என பல ஜானரில் பாடல்கள் உள்ளது. சூப்பராக இசையமைத்துள்ளார். சுனில் சார், சத்யராஜ் சார் இருவரும் முக்கியமான ரோல் செய்துள்ளனர். இருவருக்கும் நன்றி. பிரீத்தி நன்றாக நடித்துள்ளார். இந்தப்படம் கண்டிப்பாக உங்களுக்கு புது அனுபவமாக இருக்கும்” என்று தெரிவித்துள்ளார்.

dailythanthi

More articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest article