17.6 C
Scarborough

தனுஷ் நாயகி ஆகிறார் மமிதா பைஜு?

Must read

தனுஷ் நடிக்கவுள்ள புதிய படத்தில் நாயகியாக நடிக்க மமிதா பைஜுவிடம் பேச்சுவார்த்தை நடத்தி இருக்கிறார்கள்.

ஆனந்த் எல்.ராய் இயக்கி வரும் இந்திப் படத்தில் கவனம் செலுத்தி வருகிறார் தனுஷ். அதனை முடித்துவிட்டு ‘போர் தொழில்’ இயக்குநர் விக்னேஷ்ராஜா இயக்கத்தில் உருவாகும் படத்தில் நடிக்க தனுஷ் திட்டமிட்டு இருக்கிறார். இதில் நாயகியாக நடிக்க மமிதா பைஜுவிடம் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறார்கள். அவரும் படப்பிடிப்பு தேதிகள் சரியாக அமையும் பட்சத்தில் நடிக்க சம்மதம் தெரிவித்திருப்பதாக கூறப்படுகிறது.

விக்னேஷ் ராஜா – தனுஷ் இணையும் படத்தினை வேல்ஸ் நிறுவனம் தயாரிக்கவுள்ளது. இதற்கான கதை விவாதம் முடிவுற்று, திரைக்கதையினை இறுதி செய்யும் பணிகள் மும்முரமாக நடைபெற்று வருகின்றன. இப்படம் ஒரே கட்டமாக ஒட்டுமொத்த படத்தையும் முடிக்க படக்குழு ஆயத்தமாகி வருகிறது. விரைவில் இப்படம் குறித்த அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியாகும் என தெரிகிறது.

விக்னேஷ் ராஜா படத்தினை முடித்துவிட்டு, ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில் உருவாகும் படத்தில் நடிக்கவுள்ளார் தனுஷ். இதனை கோபுரம் பிலிம்ஸ் நிறுவனம் தயாரிக்கவுள்ளது.

 

More articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest article