7.8 C
Scarborough

டொராண்டோவில் அதிகரிக்கப்படும் அபராதங்கள்

Must read

கனடாவின் டொராண்டோவில் பனிப்பொழிவு ஏற்படும் காலங்களிலான வழித்தடங்களுக்கு இடையூறு விளைவிக்கும் வகையில் வாகனங்களை நிறுத்துவோருக்கான அபராதம் அதிகரிக்கப்பட்டுள்ள்ளது.

வீதிகளை மறைத்து வாகனங்களை நிறுத்தும் சாரதிகளுக்கான அபராதம் 200 டொலர்களிலிருந்து 500 டொலராக அதிகரிக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

டொராண்டோ மாநகரசபை இது தொடர்பில் தீர்மானத்தை நிறைவேற்றியுள்ளது.

பனிக்கால பராமரிப்பு

நகரசபை, பனிக்கால வழித்தடங்களில் (snow routes) தெருக்களை அடைத்து நிறுத்தும் சாரதிகளுக்கு அபராதம் விதிக்கும் என தெரிவித்துள்ளது.

இது நகரத்தின் பனிக்கால பராமரிப்பு திட்டத்தை மேம்படுத்தும் விரிவான முயற்சியின் ஒரு பகுதியாகும் எனவும் நகர நிர்வாகம் அறிவித்துள்ளது.

கடந்த பெப்ரவரி மாதம் பதிவான பாரியளவு பனிப்பொழிவைத் தொடர்ந்து இந்த தீர்மானம் எடுக்கப்பட்டது.

டொராண்டோவில் பனிப் பராமரிப்பு திறனை மேம்படுத்தும் இந்த முடிவு, வரவிருக்கும் குளிர்காலத்தில் போக்குவரத்து சிக்கல்களை குறைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

கடந்த குளிர்காலத்தில் பனிப்பொழிவு அகற்றும் நடவடிக்கைகள் முறயைாக மேற்கொள்ளப்படவில்லை என குற்றம் சுமத்தப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

More articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest article