கனடாவின் டொரன்டோவில் இடம் பெற்ற படுகொலை சம்பவம் ஒன்றுடன் தொடர்புடைய நபரை போலீசார் தேடி வருகின்றனர்.
ஸர்பருன் மற்றும் குயின் வீதிகளுக்கு அருகாமையில் கடந்த 5ம் திகதி இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டு சம்பவத்தில் ஒருவர் கொல்லப்பட்டார்.
43 வயதான நபர் ஒருவரே இவ்வாறு கொல்லப்பட்டிருந்தார்.
டொரன்டோவில் கொலையுடன் தொடர்புடைய நபரை தேடும் போலீசார் | Canada Wide Warrant Issued For Suspect In Torontos
இந்த படுகொலை சம்பவத்துடன் தொடர்புடைய குற்றச்சாட்டின் பேரில் ரொபர்ட்சன் பெரி என்ற 24 வயதான நபரை போலீசார் தேடி வருகின்றனர்.
குறித்த நபருக்கு எதிராக நாடு தழுவிய அடிப்படையில் பிடிவிராந்து உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
குறித்த நபர் ஐந்து அடி ஏழு அங்குலம் உயரமுடியவர் என தெரிவிக்கப்படுகிறது.
இந்த சம்பவம் தொடர்பில் ஏதேனும் தகவல்கள் தெரிந்தால் அது குறித்து பொலிஸாருக்கு அறிவிக்குமாறு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.