‘போலியோ’ என்று அழைக்கப்படும் ‘போலியோமைலிடிஸ்’ நோய் பாதிப்பு, 20-ம் நூற்றாண்டின் முதல் பாதியில் உலகத்தின் பெரும்பாலான நாடுகளை அச்சுறுத்திய நோயாகும். குறிப்பாக 5 வயதுக்குட்பட்ட குழந்தைகளை இந்த நோய் அதிகமாக பாதிக்கும். இது பெரும்பாலும் அறிகுறியற்றது. இருப்பினும் காய்ச்சல் மற்றும் வாந்தி போன்ற அறிகுறிகளையும் ஏற்படுத்தும்.
உலகில் போலியோவால் பாதிக்கப்படும் 200 நபர்களில் ஒருவருக்கு மீளமுடியாத பக்கவாதம் ஏற்படுகிறது. மேலும் நோயாளிகளில் 10 சதவீதம் பேர் உயிரிழக்கின்றனர். இதற்கு எந்த சிகிச்சையும் இல்லை. ஆனால் தடுப்பூசி மூலம் போலியோவை தடுக்க முடியும். மேலும் 1988-ம் ஆண்டு பாமர மக்களுக்கான தடுப்பூசி முயற்சிகள் தொடங்கிய பிறகு, உலகளவில் போலியோ பாதிப்புகள் 99 சதவீதம் குறைந்துள்ளன.

