4.5 C
Scarborough

ஜப்பானில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்: 30 பேர் காயம் – சுனாமி எச்சரிக்கை வாபஸ்

Must read

ஜப்​பானில் நேற்று சக்​தி​வாய்ந்த நிலநடுக்​கம் ஏற்​பட்​டது. இது ரிக்​டர் அளவில் 7.5-ஆக பதி​வாகி உள்​ளதாக அந்நாட்டு தேசிய நில அதிர்வு மையம் தெரி​வித்​துள்​ளது. இதில் சுமார் 30 பேர் படுகாயமடைந்துள்ளதாக தகவல் கிடைத்துள்ளது. நிலநடுக்கத்தை தொடர்ந்து ஜப்பானில் சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டது. பின்னர் அது வாபஸ் பெறப்பட்டது.

வட ஜப்​பானின் ஹோன்ஷு தீவிலுள்ள ஆவோமோரி, ஹொக்​காடியோ தீவின் தென் பகு​தி​களில் இந்த சக்​தி​வாய்ந்த நிலநடுக்​கம் அதி​க​மாக உணரப்​பட்​டது. பல கட்​டிடங்​கள் அதிர்ந்​தன. இதனால், அதிர்ச்​சி​யடைந்த மக்​கள் வீடு​களை விட்டு வெளி​யேறி சாலைகளில் தஞ்​சம் புகுந்​தனர்.

சுனாமி எச்சரிக்கை வாபஸ்: இதைத் தொடர்ந்து ஜப்​பானின் வடகடலோரப் பகு​தி​களில் சுனாமி எச்​சரிக்கை விடுக்​கப்​பட்​டது. 10 அடி உயரத்துக்கு சுனாமி பேரலை கடற்கரை பகுதிகளை தாக்கக்கூடும் என ஜப்பான் அரசு தரப்பில் மக்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டது. அதனால் கடற்கரை பகுதிகளில் வசித்த மக்கள் பாதுகாப்பு காரணங்களுக்காக வெளியேற்றப்பட்டனர். இருப்பினும், 0.5 முதல் 0.7 மீட்டர் என்ற உயரத்தில் தான் கடல் அலைகள் எழும்பின. இதையடுத்து சுனாமி எச்சரிக்கை வாபஸ் பெறப்பட்டது.

30 பேர் காயம்: இந்த நிலநடுக்​கத்​தால் ஆவோமோரி டவுன் பகு​தி​யில் ஓட்​டலில் தங்​கி​யிருந்த சிலர் காயம் அடைந்​த​தாக அங்​கிருந்து வரும் தகவல்​கள் வெளியாகின. ஆவோமோரி, ஹொக்​காடியோ பகுதியில் நிலநடுக்கத்தின் அதிர்வு காரணமாக குடியிருப்புகளில் சுவர் மற்றும் மாடங்களில் வைக்கப்பட்ட பொருட்கள் கீழே விழுந்தன. சில இடங்களில் விபத்து சம்பவங்களும் ஏற்பட்டன.

நிலநடுக்கம் காரணமாக சுமார் 30 பேர் காயமடைந்துள்ளனர். சாலைகள் விரிசல் காரணமாக சேதம் அடைந்துள்ளன. மேலும், இரவு முழுவதும் மின்சாரம் இல்லாமல் மக்கள் பாதிக்கப்பட்டனர்.

இதுகுறித்து ஜப்​பான் பிரதமர் சானி டகாய்ச்சி நிருபர்​களிடம் கூறும்​போது, “நிலநடுக்​கத்​தால் பாதிக்​கப்​பட்ட மக்​களுக்கு தேவை​யான உதவி​களை வழங்​கு​வோம். பாதிப்​பு​கள் குறித்து மதிப்​பிட அவசர​கால உயர் ​பணிக்​குழுவை நியமித்​துள்​ளோம்” என்​றார்.

hindutamil

More articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest article