10.4 C
Scarborough

சென்னையில் நடைபெறும் இளையராஜாவின் சிம்பொனி இசை நிகழ்ச்சி!

Must read

1976 ம் ஆண்டு தேவராஜ்-மோகன் இயக்கத்தில் வெளியான அன்னக்கிளி படத்தின் மூலம் அறிமுகமானவர் இசைஞானி இளையராஜா. இவர் தனது வரலாற்றில் இதுவரை 1,000க்கும் மேற்பட்ட படங்களுக்கு இசையமைத்துள்ளார். மேலும் 7,000 பாடல்களை எழுதி உள்ளார். அன்று முதல் இன்று வரை இவருடைய இசைக்கு மயங்காதவர்கள் எவரும் இல்லை. தனது தனித்துவமான இசையினால் ஏராளமான ரசிகர்களை தன் வசம் வைத்துள்ளார்.

இவர் கடந்த 2025ம் ஆண்டு லண்டனில் உள்ள அப்பல்லோ அரங்கத்தில் வேலியன்ட் என்னும் தலைப்பில் தனது சிம்பொனி இசை நிகழ்ச்சியை அரங்கேற்றினார். அதனை தொடர்ந்து புகழ்பெற்ற ராயல் பில்ஹார்மோனிக் இசைக்குழுவுடன் இணைந்து துபாயில் சிம்பொனி இசை நிகழ்ச்சியை நடத்தினார்.

இந்த நிலையில், வருகிற மே மாதம் 30ம் தேதி சென்னையில் பிரமாண்டமான சிம்பொனி இசை நிகழ்ச்சியை நடத்த உள்ளதாக இசையமைப்பாளர் இளையராஜா அறிவித்துள்ளார். “FROM RAJA WITH LOVE” என்ற பெயரில் நடைபெறவுள்ள இந்த நிகழ்ச்சியில், நூற்றுக்கணக்கான சர்வதேச மற்றும் உள்நாட்டு இசைக்கலைஞர்கள் பங்கேற்று நேரலையாக இசைக்க உள்ளனர்.

More articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest article