15.4 C
Scarborough

சீன நிறுவனத்தை வெளியேற்றும் கனடா

Must read

தேசிய பாதுகாப்பு அச்சுறுத்தல் காரணமாக கண்காணிப்பு கமரா அமைப்புகளை தயாரிக்கும் சீன நிறுவனத்தை அதன் கனேடிய வணிகத்தை முடிவுக்கு கொண்டு வருவதுடன் நாட்டில் இருந்து வெளியேறுமாறு மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது.

கனடாவின் முதலீட்டு சட்டத்தின் கீழ் மேற்கொள்ளப்பட்ட தேசிய பாதுகாப்பு குறித்த மதிப்பாய்வின் விளைவாக Hikvision Canada Inc.எனும் குறித்த நிறுவனத்துக்கு இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதாக தொழில்துறை அமைச்சர் மெலானி ஜோலி தெரிவித்துள்ளார்.

மதிப்பாய்வின் ஒரு பகுதியாக, கனடாவின் பாதுகாப்பு மற்றும் உளவுத்துறை சமூகத்தால் வழங்கப்பட்ட தகவல்களையும் ஆதாரங்களையும் அரசாங்கம் ஆராய்ந்ததாக ஜோலி கூறினார்.

கனடாவில் நிறுவனம் தொடர்ந்து செயல்பட அனுமதிப்பது நாட்டின் தேசிய பாதுகாப்பிற்கு தீங்கு விளைவிக்கும் என்று அரசாங்கம் இறுதியில் முடிவு செய்தது என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.

Hangzhou Hikvision Digital Technology Co. Ltd என்ற பெயருடைய Hikvision நிறுவனம் உலகின் மிகப்பெரிய கண்காணிப்பு உபகரணங்களை உற்பத்தி செய்யும் நிறுவனம் என்று தன்னை விவரிக்கிறது. இது 2014 முதல் கனடாவில் துணை நிறுவனத்தைக் கொண்டுள்ளது.

More articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest article