10.4 C
Scarborough

சீன இராணுவ அணிவகுப்பில் ரஷ்யா, வட கொரிய ஜனாதிபதிகள் பங்கேற்பு: ட்ரம்ப் கொதிப்பு!

Must read

சீன ராணுவ அணிவகுப்​பில் ரஷ்​யா, வட கொரி​ய ஜனாதிபதிகள் பங்​கேற்​றது தொடர்​பாக அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் விமர்​சனம் வெளியிட்டுள்ளார்.

இரண்​டாம் உலகப் போர் நிறைவடைந்து 80 ஆண்​டு​களைக் குறிக்​கும் வகை​யில், சீனா​வில் நேற்று விழா நடத்​தப்​பட்​டது.

சீன தலைநகர் பெய்​ஜிங்​கில் நடை​பெற்ற ராணுவ அணிவகுப்பு விழா​வில் ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடின், வடகொரிய ஜனாதிபதி கிம் ஜாங் உன், ஈரான் ஜனாதிபதி மசூத் பெஜேஷ்கியன் உள்பட சீனா​வின் 26 நட்பு நாடு​களைச் சேர்ந்த தலை​வர்​கள் பங்​கேற்​றனர்.

சீனா​வின் நவீன ஏவு​கணை​களும் ராணுவத் தளவாடங்​களும் போர் விமானங்​களும் இந்த அணிவகுப்பு நிகழ்ச்​சி​யில் காட்​சிப்படுத்​தப்​பட்​டன.

இந்த நிகழ்ச்​சி​யின்​போது ராணுவ வீரர்​களின் அணிவகுப்பு மரி​யாதையை திறந்​தவெளி வாக​னத்​தில் சென்று ஏற்​றுக்​கொண்ட ஜி ஜின்​பிங், “எந்​தவொரு அச்​சுறுத்​தலுக்​கும் சீனா அஞ்​சாது, மனிதகுல​மானது போர் அல்​லது அமைதி ஆகிய​வற்​றில் ஒன்றை தேர்ந்​தெடுக்​கும் சூழலுக்கு மீண்​டும் தள்​ளப்​பட்​டுள்​ளது” என்று தெரி​வித்​தார்.

இந்த அணிவகுப்பு குறித்து தனது சமூக வலை​தளப் பக்​கத்​தில் கருத்து வெளியிட்டுள் ள அமெரிக்க ஜனாதிபதி ட்ரம்ப்,

‘வெளி​நாட்டு படையெடுப்​பாளர்​களிடம் இருந்து சீனா சுதந்​திரம் பெறு​வதற்​காக அமெரிக்கா அளித்த மகத்​தான ஆதர​வை​யும், அமெரிக்​கர்​கள் சிந்​திய ரத்​தத்​தை​யும் அதிபர் ஜி ஜின்​பிங் குறிப்​பிடு​வாரா என்​பது மிகப்​பெரிய கேள்​வி​யாக உள்​ளது.

சீன வெற்​றிக்​காக உயி​ரிழந்த அமெரிக்​கர்​கள் மதிக்​கப்​படு​வார்​கள், நினை​வு​கூரப்​படு​வார்​கள் என்று நான் நம்​பு​கிறேன். அமெரிக்கா​வுக்கு எதி​ராகச் செய்​யும் சதி​களுக்கு ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடின் மற்​றும் வடகொரிய ஜனாதிபதி கிம் ஜாங் உன்​னுக்கு வாழ்த்​து​களை தெரி​வித்​துக் கொள்​கிறேன்.” என்று குறிப்பிட்டுள்ளார்.

இந்​நிலை​யில், ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடின்  – வடகொரிய ஜனாதிபதி ஆகிய இரு​வரும் சுமார் இரண்​டரை மணிநேரம் இருதரப்பு பேச்​சு​வார்த்​தை​யில் ஈடு​பட்​டனர்.

இந்த பேச்​சு​வார்த்​தைக்கு பின்​னர் ரஷ்ய நாட்​டுக்கு வரு​மாறு கிம் ஜாங் உன்​னுக்​கு, புடின்  அழைப்பு விடுத்​துள்​ளார். இந்த அணிவகுப்பு நிகழ்ச்​சி​யில், அமெரிக்​கா, இந்​தி​யா, ஜப்​பான் உள்​ளிட்ட நாடு​களின் தலை​வர்​கள் கலந்​து​கொள்​ள​வில்​லை.

ஷாங்​காய் ஒத்​துழைப்பு மாநாட்​டில்  பங்​கேற்​ப​தற்​காக 2 நாள்​கள் சீனப் பயணம் மேற்​கொண்​டிருந்​த பிரதமர்​ மோடி, இந்​த அணிவகுப்​பில்​ கலந்​து​கொள்​ளாமல்​ ​நாடு திரும்​பி​ உள்ளார்.

More articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest article