சீனாவின் வடக்குப் பகுதியில் கடந்த சில நாட்களாக கடும் மழை பெய்து வருகிறது. இதனால் ஓர்டோஸ், பாவோடா உள்ளிட்ட நகரங்களில் வெள்ளம் கரைபுரண்டோடியது.
அதன்படி மஞ்சள் நதியில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கில் 10 இற்கும் மேற்பட்டோர் அடித்துச் செல்லப்பட்டனர்.
அதேபோல் ஓர்டோசிலுள்ள ஆற்றிலும் 3 பேர் அடித்துச் செல்லப்பட்டனர்.
தொடர்ந்து நடைபெற்று வந்த மீட்புப் பணியில் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்ட 13 பேரும் சடலங்களாக மீட்கப்பட்டுள்ளனர்.
வெள்ளத்தில் சிக்குண்டு காணாமல் போன பலரை மீட்குமு் பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகிறது.