தென்மேற்கு சீனாவின் க்சிசான் தன்னாட்சி பிராந்தியத்தின் க்சிகாசே நகரில் உள்ள டிங்கிரி கவுண்டியில் 10km ஆழத்தில் ஏற்பட்ட 6.8 மெக்னிடியூட் அளவிலான நில அதிர்வில் குறைந்தது 95 பேர் உயிரிழந்தனர்.
க்சிகாசே நகரில் அந்த நாட்டு நேரப்படி இன்று காலை 9 மணியளவில் இந்த நில அதிர்வு உணரப்பட்டதாக அமெரிக்கப் புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இந்த நில அதிர்வின் காரணமாக 130 பேர் காயமடைந்ததுடன், ஆயிரத்திற்கும் மேற்பட்ட குடியிருப்புகள் சேதமடைந்துள்ளதாகக் குறிப்பிடப்படுகிறது.
குறித்த நில அதிர்வு 6.8 மெக்னிடியூட் அளவில் உணரப்பட்டதாகச் சீன அரச ஊடகம் குறிப்பிட்டுள்ளது.
அத்துடன், 5 மெக்னிடியூட் அளவில் மற்றுமொரு நில அதிர்வு உணரப்படுவதற்கான சாத்தியம் காணப்படுவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்தநிலையில், அந்தப் பகுதியில் மின்சாரம் மற்றும் தண்ணீர் விநியோகம் தடைப்பட்டுள்ளதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்த நில அதிர்வின் தாக்கம் அண்டை நாடான நேபாளம் மற்றும் இந்தியாவின் பல்வேறு பகுதிகளில் உணரப்பட்ட போதிலும் சேதம் மற்றும் உயிரிழப்புகள் ஏற்படவில்லை எனச் சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன.