11.3 C
Scarborough

சிரியாவில் இஸ்ரேல் ட்ரோன் தாக்குதல் – 6 இராணுவ வீரர்கள் பலி!

Must read

சிரிய தலைநகரில் இஸ்ரேல் நடத்திய ட்ரோன் தாக்குதல்களில், அந்நாட்டின் இராணுவத்தைச் சேர்ந்த 6 வீரர்கள் கொல்லப்பட்டதாக அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

சிரியாவின் தலைநகர் டமாஸ்கஸின் தெற்கில் அமைந்துள்ள கிஸ்வா நகரத்தில், இஸ்ரேல் ட்ரோன்களின் மூலம் தாக்குதல்கள் நடத்தியுள்ளதாகவும் இந்தத் தாக்குதல்களில் சிரிய இராணுவத்தைச் சேர்ந்த 6 பேர் கொல்லப்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்தச் சம்பவத்தில், ஏராளமானோர் படுகாயமடைந்த நிலையில், அவர்கள் அனைவரும் தற்போது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். மேலும், இதுகுறித்து, இஸ்ரேல் இராணுவம் இதுவரையில் எந்தவொரு கருத்தும் தெரிவிக்கவில்லை எனக் கூறப்படுகிறது.

More articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest article