19.6 C
Scarborough

சதீஸ் நடராசாவின் 30 மணி நேர ஒலிபரப்புச் சாதனை!

Must read

கனடா, ரொறோன்டோவை மையமாகக் கொண்டியங்கும் யுகம் வானொலியில் 30 மணி நேரம் தொடர்ச்சியாக நிகழ்ச்சிகளைத் தொகுத்து வழங்கி, சதீஸ் நடராசா ஒலிபரப்புச் சாதனைப் படைத்துள்ளார்.

2024, 27ஆம் திகதி காலை 10 மணிக்கு ஆரம்பித்து 28ஆம் திகதி பிற்பகல் 4 மணி வரை தொடர்ச்சியாக நிகழ்ச்சிகளைத் தொகுத்து வழங்கி இந்த சாதனையை நிகழ்த்தினார்.

சதீஸ் நடராசா அறிவிப்புத் துறையை நேசிக்கும் ஒருவர் என்றும் அவர் தனது வெற்றிக்காக கடினமாக உழைத்து இந்தச் சாதனையை நிகழ்த்தியிருப்பதாகவும் யுகம் வானொலியின் அதிபர் கணபதி ரவீந்திரன் தெரிவித்தார்.

இந்த சாதனை நிகழ்வை வானொலியின் அதிபர் கணபதி ரவீந்திரன் ஆரம்பித்து வைக்க, சதீஸ் நடராஜாவின் மனைவி, பிள்ளைகள் உள்ளிட்ட குடும்பத்தார், நண்பர்கள் உடனிருந்தனர்.

சதீஸ் நடராஜா 30 மணி நேர ஒலிபரப்புச் சாதனையை நிறைவு செய்யும் தருணத்தில் குடும்பத்தார், நண்பர்கள், உறவினர்கள், நேயர்கள், சக அறிவிப்பாளர்கள் நேரடியாக கலையகத்திற்கு வந்து வாழ்த்துகளைத் தெரிவித்திருந்தனர்.

இந்த சாதனையை நிகழ்த்த உந்துசக்தியாக இருந்த கணபதி ரவீந்திரன், ரூபி யோகதாசன், குடும்பத்தார், நண்பர்கள், அனைவருக்கும் நன்றி தெரிவித்த சதீஸ், ‘இந்த வெற்றியை எனது பெற்றோருக்கு சமர்ப்பிக்கிறேன்’ என்று தெரிவித்தார்.

Breaking barriers and setting new milestones, your dedication and passion have left an indelible mark in the world of radio broadcasting. Here’s to celebrating your incredible achievement!

 

More articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest article