15.4 C
Scarborough

சஜித்தின் அறைக்குள் எம்.பி ஒருவர் என்னைத் தாக்கினார் – அர்ச்சுனா புதிய குற்றச்சாட்டு

Must read

எதிர்க்கட்சித் தலைவரின் அலுவலகத்திற்குச் சென்றபோது, ​​SJB பாராளுமன்ற உறுப்பினர் சுஜித் சஞ்சய பெரேராவால் தாக்கப்பட்டதாக யாழ். மாவட்ட சுயேட்சை பாராளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனா தெரிவித்துள்ளார்.

​​எதிர்க்கட்சித் தலைவரின் அலுவலகத்திற்கு தனது பாராளுமன்ற உரைக்கு ஒதுக்கப்பட்ட நேரம் குறித்து விசாரிப்பதற்காக சென்றதாக அர்ச்சுனா கூறினார்.

“பாராளுமன்ற வளாகத்திற்குள் இதுபோன்ற சம்பவங்கள் நடந்தால், நாங்கள் எப்படி தெருவில் நடமாட முடியும்?’ என்று அவர் கேள்வி எழுப்பினார்.

இந்த விடயம் தொடர்பில் சபாநாயகரிடம் முறைப்பாடு செய்யுமாறு அவைத் தலைவர் எம்.பியிடம் கோரிக்கை விடுத்தார்.

இதேவேளை, பாராளுமன்ற உறுப்பினர் அர்ச்சுனா எதிர்கட்சித் தலைவர்களின் செயலாளருக்கு முன்பாக அநாகரீகமான முறையில் நடந்து கொண்டதுடன், பாராளுமன்றத்திற்குப் புறம்பான வார்த்தைகளை உதிர்த்ததாகவும் SJB பாராளுமன்ற உறுப்பினர் நளின் பண்டார தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து சபாநாயகரிடம் முறைப்பாடு அளித்துள்ளோம் என்றார்.

பாராளுமன்ற உறுப்பினர் சுஜித் சஞ்சய பெரேரா, குற்றச்சாட்டை நிராகரிப்பதாகவும், பாராளுமன்ற உறுப்பினர் அர்ச்சுனாவே தன்னை அச்சுறுத்தியதாகவும் தெரிவித்துள்ளார்.

 

More articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest article