விஜய் ஆண்டனி ஆரம்பத்தில் இசையமைப்பாளராக திரைத்துறையில் நுழைந்தவர். காதலில் விழுந்தேன், வேட்டைக்காரன், அங்காடி தெரு உள்ளிட்ட பல படங்களுக்கு இசையமைத்துள்ளார். தற்போது தயாரிப்பாளராகவும், இயக்குனராகவும், நடிகராகவும் வலம் வருகிறார். இவர் காளி, நான், சைத்தான், பிச்சைக்காரன் உள்பட பல்வேறு படங்களில் நடித்துள்ளார்.
தமிழ் திரையுலகின் முன்னணி இசையமைப்பாளர்களான வித்யாசாகர் மற்றும் விஜய் ஆண்டனி கலந்து கொள்ளும் இரண்டு பிரம்மாண்ட இசை நிகழ்ச்சிகளை கோவையில் நாய்ஸ் அண்டு கிரைன்ஸ் மற்றும் சாஸ்தா புரொடக்ஷன் ஏற்பாடு செய்யவுள்ளன. ‘தி நேம் இஸ் வித்யாசாகர்’ நிகழ்ச்சி செப்டம்பர் 20ம் தேதியும், ‘விஜய் ஆண்டனி லைவ் இன் கான்செர்ட்’ செப்டம்பர் 21ம் தேதி அன்றும் மிகப்பெரிய அளவில் ரசிகர்களின் முன்னிலையில் கோவை கொடிசியா மைதானத்தில் நடைபெற உள்ளன.
இவற்றுக்கான நுழைவுச் சீட்டுகள் டிஸ்ட்ரிக்ட் பை சோமேட்டோ இணையதளம் மற்றும் செயலியில் கிடைக்கும். இசை ரசிகர்களின் இதயத்துடிப்பை புரிந்து அதற்கேற்ப நிகழ்ச்சிகளை சிறப்பாக திட்டமிட்டு அரங்கேற்றி வரும் நாய்ஸ் அண்டு கிரைன்ஸ் நிறுவனத்தினர், முன்னணி இசையமைப்பாளர்கள் வித்யாசாகர் மற்றும் விஜய் ஆண்டனி கோவையில் பங்கு பெறும் இசை நிகழ்ச்சியை சாஸ்தா புரொடக்ஷன்ஸ் உடன் இணைந்து நடத்துவது குறித்து மகிழ்ச்சி தெரிவித்துள்ளனர். இந்த நிகழ்ச்சிகளில் ரசிகர்களின் இதயம் கவர்ந்த பாடகர்கள் மற்றும் இசைக் கலைஞர்கள் வித்யாசாகர் மற்றும் விஜய் ஆண்டனி உடன் பங்கேற்று மறக்க முடியாத பாடல்களை ரசிகர்களுக்காக மேடையில் பாடவுள்ளனர்.