19.5 C
Scarborough

கைது பயத்தில் கடவுளை நாடும் அரசியல்வாதிகள்!

Must read

ஊழல், மோசடி குற்றச்சாட்டுகளில் ஈடுபட்டனர் எனக் கருதப்படும் சில அரசியல் வாதிகளும், அரச அதிகாரிகளும் தற்போது வழிபாட்டு தலங்களுக்குச் சென்று விசேட பூஜை வழிபாடுகளில் ஈடுபட்டுவருகின்றனர் என சிங்கள வார இதழொன்று செய்தி வெளியிட்டுள்ளது.

கடந்த காலங்களில் ஊழல், மோசடிகளில் ஈடுபட்ட நபர்கள் கைது செய்யப்பட்டுவரும் நிலையிலேயே இவர்கள் இவ்வாறு விகாரைகள் மற்றும் கோவில்களுக்கு சென்று வழிபடுகின்றனர் எனவும் கூறப்படுகின்றது.

கதிர்காமத்தில் 20 இற்கு மேற்பட்ட அரசியல் வாதிகள் இதுவரை விசேட வழிபாடுகளில் ஈடுபட்டுள்ளனர் எனத் தெரியவந்துள்ளது. அத்துடன், சில அரச அதிகாரிகள் அநுராதபுரம், ஸ்ரீ மகாபோதியில் வழிபாடுகளில் ஈடுபட்டுள்ளனர்.

இந்தியாவுக்கு சென்றுள்ள சில அரசியல்வாதிகள் திருப்பதி உள்ளிட்ட தலங்களிலும் வழிபாடுகளில் ஈடுபட்டுள்ளனர் என அந்த செய்தியில் கூறப்பட்டுள்ளது.

More articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest article