4.7 C
Scarborough

குழந்தை பெறாமல் இருக்க தீர்மானிப்பதே பெஸ்ட் பேரண்டிங்!

Must read

ஏற்கெனவே அம்மாவாதான் இருக்கேன் என குழந்தை குறித்து வரலட்சுமி சரத்குமார் கருத்து தெரிவித்துள்ளார்.தென்னிந்திய சினிமாவின் முன்னணி நடிகையாக பல வெற்றிப்படங்களில் வில்லி மற்றும் முக்கிய கேரக்டரில் நடித்துள்ள நடிகை வரலட்சுமி சரத்குமார். நடிகை வரலட்சுமி சரத்குமார் தொழிலதிபர் நிக்கோலாய் சச்தேவ் என்பவரை 2024 ஜூலை 2ஆம் திகதி தாய்லாந்தில் திருமணம் செய்து கொண்டார்.

இவர்களது திருமணம் கிராபி பகுதியில் உள்ள கடற்கரை ரிசார்ட்டில் நெருங்கிய நண்பர்கள் மற்றும் குடும்பத்தினருடன் நடைபெற்றது. அதைத் தொடர்ந்து ஜூலை 3-ம் தேதி சென்னையில் வரவேற்பு நிகழ்ச்சி நடந்தது.

இந்நிலையில் நான் ஏற்கெனவே என் தங்கச்சி, பிரெண்ட்ஸ், நாய்க்குலாம் அம்மாவ தான் இருக்கேன் என வரலட்சுமி சரத்குமார் தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் கூறியதாவது:-

ஒரு குழந்தைய பெத்து கொடுத்தா மட்டும் தான் தாய்மை அடைய முடியும்னு சொல்ல முடியாது. எனக்கு இப்ப குழந்த பெத்துக்குற ஐடியா இல்ல. எதிர்காலத்துல மாறலாம். நான் ஏற்கெனவே என் தங்கச்சி, பிரெண்ட்ஸ், நாய்க்குலாம் அம்மாவாதான் இருக்கேன். இதுல இன்னொரு குழந்தைய என்னால பாத்துக்க முடியாது. ஒரு பொண்ணு குழந்த பெத்துக்க வேண்டாம்னு முடிவு எடுத்தா, அதுதான் `பெஸ்ட் பேரென்டிங்’ முடிவா இருக்கும் என்றார்

More articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest article