Sea Leisure Yachting Group (SLYG) இனால் யாழ்ப்பாண இளைஞர்களைப் பயன்படுத்தி யாழ்ப்பாணத்தில் தயாரிக்கப்பட்ட ‘அம்பர்’ எனப் பெயரிடப்பட்ட சொகுசு சுற்றுலா படகுச் சேவையின் தொடக்க நிகழ்வு குறிகாட்டுவான் கடற் பகுதியில் இன்று வியாழக்கிழமை மாலை (04.09.2025) நடைபெற்றது. வடக்கு மாகாண ஆளுநர் நா.வேதநாயகன், இந்தியத் துணைத்தூதுவர் சாய் முரளி ஆகியோர் கலந்துகொண்டனர்.