முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் கைது இலங்கையின் ஜனநாயகத்திற்கு வைக்கப்ட்டக கரும்புள்ளி என தெரிவித்த முன்னாள் அமைச்சர் வஜீர அபேவர்தன, அவர் சிறை வைக்கப்பட்டிருந்த வெலிகடை சிறைச்சாலை வளாகம் முன்னாள் ஜனாதிபதி ரணிலின் குடும்பச் சொத்து என்றும் கூறினார்.
ஐக்கிய தேசிய கட்சி கொழும்பு அலுவலகத்தில் இன்று (27) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு மேலும் கருத்துரைத்த அவர்,
கடந்த வாரத்தில் இலங்கையின் ஜனநாயகம் மீது கரும்புள்ளி வைக்கப்பட்டது. அதனையிட்டு முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் கைது தொடர்பில் சர்வதேச ஜனநாயக ஒன்றியத்தின் தலைவர் கவலை வௌியிட்டுள்ளார்.
அவர் கட்டமைக்கப்பட்ட வாழ்க்கை முறையை பின்பற்றி வருகின்ற நிலையில் அதற்கு இடையூறு செய்யும் வகையில் மேற்கொள்ளப்பட்ட செயற்பாடுகளினால் அவரின் சுகாதார நிலைமை பாதிப்புபடைந்துள்ளது.
இதில் குறிப்பிடத்தக்க விடயம் என்னவெனில் அவர் கைது செய்து சிறையிடப்பட்டிருந்த வெலிகடை சிறைச்சாலை வளாகம் கூட அவரது பாட்டிக்கு சொந்தமான 43 ஏக்கர் நிலப்பரப்பில் அமைந்துள்ளது என்பதாகும்.
அதேபோல் இது கவலைக்குரிய விடயமாகும். எவ்வாறாயினும் அவரது குடும்பத்திற்கு சொந்தமான இடத்தில் அவர் சிறை வைக்கப்பட்டமை விதியின் விளையாட்டு என்றே கருதுகிறோம்.