கியூபாவில் (Cuba) நிலவி வரும் கடும் மனிதாபிமான நெருக்கடியைச் சமாளிக்க $8 மில்லியன் நிதியுதவி வழங்கப்படும் என கனடா அரசு அறிவித்துள்ளது.
அமெரிக்க அதிபர் Donald Trump தலைமையிலான நிர்வாகம் விதித்துள்ள எண்ணெய் தடையால் கியூபாவில் எரிசக்தி மற்றும் உணவுத் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது.
இந்த நிதியுதவி Global Affairs Canada (GAC) மூலம் வழங்கப்படுகிறது. இது குறிப்பாகப் பாதிப்புக்குள்ளான கியூப மக்களின் உணவுப் பாதுகாப்பு மற்றும் ஊட்டச்சத்தை மேம்படுத்தப் பயன்படுத்தப்படும்.
இந்த நிதி உலக உணவுத் திட்டம் (World Food Program) மற்றும் ஐக்கிய நாடுகளின் சிறுவர் நிதியம் (UNICEF) ஆகியவற்றுடன் இணைந்து உடனடியாகப் பகிர்ந்தளிக்கப்படவுள்ளது.
இது கனடாவின் வெளியுறவுக் கொள்கை எனத் தெரிவித்துள்ள வெளியுறவுத்துறை அமைச்சர் Anita Anand, மனிதாபிமான அடிப்படையில் இந்த உதவி வழங்கப்படுவதாகக் குறிப்பிட்டுள்ளார்.

