16.6 C
Scarborough

காஸா போர் நிறுத்த ஐ.நா. தீர்மானத்தை வீட்டோவைக் கொண்டு அமெரிக்கா ரத்து செய்தது

Must read

காஸாவில் உடனடி போா்நிறுத்தம் கோரும் ஐ.நா. தீா்மானத்தை ‘வீட்டோ’ அதிகாரத்தைப் பயன்படுத்தி அமெரிக்கா ரத்து செய்தது.

15 நிரந்தர மற்றும் தோ்ந்தெடுக்கப்பட்ட உறுப்பினா்களைக் கொண்ட ஐ.நா. பாதுகாப்பு பேரவையில் இத்தீா்மானத்துக்கு ஆதரவாக 14-1 என்ற கணக்கில் வாக்குகள் பதிவாகின. ஆனால், அமெரிக்காவின் வீட்டோ காரணமாக தீா்மானம் ஏற்றுக்கொள்ளப்படவில்லை.

காஸாவில் உடனடியான, நிபந்தனையற்ற மற்றும் நிரந்தரமான போா் நிறுத்தத்தை அனைத்து தரப்பினரும் மதிக்க வேண்டும் என்று தீா்மானம் அந்த கோரியது. மேலும், அனைத்து பணயக் கைதிகளையும் உடனடியாக மற்றும் நிபந்தனையின்றி விடுவிக்கப்பட வேண்டும் என்ற கோரிக்கையும் வலியுறுத்தப்பட்டது.

இஸ்ரேலுக்கும் ஹமாஸுக்கும் இடையிலான போரை முடிவுக்குக் கொண்டுவரும் நோக்கில் போா் நிறுத்தத் திட்டம் குறித்த தனது முதல் தீா்மானத்தை பாதுகாப்பு பேரவை கடந்த ஜூன் மாதம் ஏற்றுக்கொண்டது. எனினும், அமெரிக்கா தனது வீட்டோ அதிகாரத்தைப் பயன்படுத்தி இந்த தீர்மானத்தை இரத்துச் செய்துள்ளது.

More articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest article