6.2 C
Scarborough

காலிஸ்தானி குழு நிதி திரட்டல்; தொண்டு நிறுவனங்களை ஆய்வு செய்யம் கனடா

Must read

காலிஸ்தானி பயங்கரவாத குழுக்களுக்கு நிதியளிப்பதாக சந்தேகிக்கப்படும் தொண்டு நிறுவனங்களை ஆய்வு செய்யும் பணிகளை கனடா முடுக்கிவிட்டுள்ளது.

இதற்கமைவாக அதிகாரிகள் ஸ்லீப்பர் செல்கள் மற்றும் அதிக ஆபத்துள்ள நபர்கள் விசாரணைக்கு உட்படுத்தப்பட்டு வருகின்றனர்.

காலிஸ்தானி குழுக்கள் கனடாவிலிருந்து நிதி உதவியைப் பெறுகின்றன, எனினும் இதனூடாக குற்றச் செயல்கள் புரிதல் மற்றும் தொண்டு நிறுவனங்களை தவறாகப் பயன்படுத்துதல் உள்ளிட்ட பல்வேறு வழிகளைப் பயன்படுத்துகின்றன என்பதை கனேடிய அரசாங்கம் ஒப்புக்கொண்டதைத் தொடர்ந்து இந்த நடவடிக்கை முன்னெடுக்கப்படுகிறது.

கனடா வருவாய் முகவர் நிறுவனம் (CRA) பதிவுசெய்யப்பட்ட தொண்டு நிறுவனங்களை ஒழுங்குபடுத்துவதற்கும், அவை நேரடியாகவோ அல்லது மறைமுகமாகவோ பயங்கரவாத நடவடிக்கைகளில் ஈடுபடவோ அல்லது ஆதரிக்கவோ கூடாது என்பதை உறுதி செய்வதற்கு பொறுப்பான நிறுவனமாகும்.

இந்த நிலையில் மேற்படி நிறுவனம் தொண்டு நிறுவனங்களில் பயங்கரவாத நிதி துஷ்பிரயோகத்தை மதிப்பிடுவதற்கான அதன் செயல்முறையை மேம்படுத்துவதில் உறுதியாக உள்ளது.

எதிர்காலத்தில் தொண்டு நிறுவனங்கள் கட்டுப்பாடுகளைக் கொண்டிருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

More articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest article