15.4 C
Scarborough

கார் பந்தய பயிற்சியின் போது விபத்துக்குள்ளான நடிகர் அஜித்தின் கார்

Must read

போர்த்துக்கல் நாட்டில் நடைபெற்று வரும் கார் பந்தய போட்டிகளில் நடிகர் அஜித்குமார் கலந்து கொண்டுள்ளார். இதற்கான பயிற்சியில் அவர் ஈடுபட்டிருந்தபோது கார் விபத்தில் சிக்கியது.

இந்த விபத்தில் அஜித்குமாரின் உயிருக்கு ஆபத்து எதுவும் ஏற்படவில்லை. அதிர்ஷ்டவசமாக அவர் உயிர் தப்பினார்.

போர்த்துக்கல் நாட்டில் கார் பந்தய மைதானத்தில் பயிற்சியில் ஈடுபட்டிருந்தபோது அஜித்குமாரின் கார் விபத்தில் சிக்கியதுடன் உடனடியாக அவரை பத்திரமாக மீட்டுள்ளனர். இதில் காரில் மட்டும் சேதம் ஏற்பட்டு உள்ளது.

இந்த விபத்து தொடர்பாக அஜித்குமார் கூறுகையில் :-

எங்களுக்கு மீண்டும் நல்ல நேரமாக அமைந்துள்ளது. எனது கார் சிறிய அளவிலான விபத்தில் சிக்கியது. யாருக்கும் எதுவும் நடக்கவில்லை. மீண்டும் பெருமையை நிலை நாட்டுவோம் என்கிற நம்பிக்கை எங்களுக்கு உள்ளது.

விபத்து ஏற்பட்டவுடன் எங்களுக்கு உறுதுணையாக இருந்த நண்பர்களுக்கு இந்த நேரத்தில் எனது நன்றியை தெரிவித்து கொள்கிறேன். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

More articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest article