3.2 C
Scarborough

காய்ச்சல் பரவுகை தொடா்பில் வெளியான அறிவிப்பு!

Must read

கனடாவில் இந்த ஆண்டுக்கான காய்ச்சல் (Flu) பரவல் வழக்கத்தைவிட முன்கூட்டியே ஆரம்பித்துள்ளதாகவும், நாடு முழுவதும் நோயாளிகள் எண்ணிக்கை அதிகரித்து வருவதாகவும் மருத்துவ நிபுணர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர். இந்த ஆண்டின் காய்ச்சல் வைரஸ் “அதிகமாக பரவும் தன்மை கொண்டதும், கடுமையான தாக்கம் ஏற்படுத்தக் கூடியதுமானதாக” இருப்பதாக தொற்று நோய் மருத்துவர் கிறிஸ்டோபர் லேபோஸ் தெரிவித்துள்ளார்.

பொதுவாக காய்ச்சல் பரவல் பருவத்தின் பின்னர்பகுதியில் உச்சத்தை எட்டும் நிலையில், இந்த ஆண்டில் அது முன்பே தீவிரமடைந்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

குறிப்பாக H3N2 வகை வைரஸ் மிகவும் தொற்றுதலுக்குரியதாக இருப்பதாக சுட்டிக்காட்டிய அவர், “நீங்கள் நோயுற்றிருந்தால் வீட்டிலேயே இருங்கள்” என அறிவுறுத்தியுள்ளார்.

ஒட்டாவாவில் உள்ள கிழக்கு ஒன்றாரியோவில் குழந்தைகள் மருத்துவமனை (CHEO), கடந்த வாரம் அவசர சிகிச்சைப் பிரிவில் தினமும் 200-க்கும் அதிகமான நோயாளிகள் வருகை தந்ததாக தெரிவித்துள்ளது.

துரதிஷ்டவசமாக, சில உயிரிழப்புகளும் பதிவாகியுள்ளன. மேலும் மருத்துவமனை வருகைகளும் அனுமதிப்புகளும் பெருமளவில் அதிகரித்துள்ளன” என அந்த மருத்துவமனையின் பேச்சாளர் தெரிவித்துள்ளார்.

More articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest article