பிரபல இந்திய நடிகர் கபில் சர்மாவுக்குச் சொந்தமான கனடாவில் புதிதாகத் திறக்கப்பட்ட உணவகத்தில் துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டுள்ளது.
எனினும் இந்தத் தாக்குதலில் எவருக்கும் எந்தவிதமான பாதிப்புகளும் ஏற்படவில்லை என அந்நாட்டுத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந்த துப்பாக்கிச் சூட்டின் போது உணவகம் சேதமடைந்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
இதேவேளை, தேசிய புலனாய்வு அமைப்பின் தேடப்படும் குற்றவாளி பட்டியலில் உள்ள ஹர்ஜித் சிங் லட்டி, துப்பாக்கிச் சூட்டுக்குப் பொறுப்பேற்றுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.