அமெரிக்காவுடனான வர்த்தக பேச்சுவார்த்தைகளை முன்னேற்றுவதற்காக தொழில்நுட்ப நிறுவனங்களை இலக்காகக் கொண்ட Digital சேவை வரியை Ottawa இரத்து செய்த சில நாட்களுக்குப் பின்னர் அரசாங்கம் நிலைமையைக் கையாண்ட விதத்தில் பல விமர்சகர்கள் தங்கள் ஏமாற்றத்தை வெளிப்படுத்தியிருந்தனர், எனினும் ஒரு நிபுணர் பிரதமர் Mark Carney யின் இந்த நடவடிக்கையை “mini-win” என்று அழைக்கிறார்.
கடைசி நிமிடம் வரை வரியை தக்க வைத்துக் கொள்ள மத்திய அரசு செய்த நாடகம், விட்டுக்கொடுக்கும் முன் ஒரு சலுகை வழங்கப்பட்டதாகத் தோன்றியது என நிதி அமைச்சகத்தின் முன்னாள் சிறப்பு ஆலோசகரும் பொருளாதார நிபுணருமான Julian Karaguesian தெரிவித்தார்.
நாங்கள் பகிரங்கமாக பின்வாங்கி இந்த வரியை இரட்டிப்பாக்க வேண்டியிருந்தது என்று கூறிய Karaguesian ஆனால், இது பிரதமரின் ஒரு நல்ல மூலோபாய, தந்திரோபாய சூழ்ச்சி என்று வர்ணிக்கின்றார்.
கனேடிய அரசாங்கம் மத்திய, மாகாண அரசாங்கங்களின் வரவு செலவுத்திட்டங்களின் போது பாதுகாப்பு செலவினங்களை மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 5 சதவீதமாக உயர்த்துவது உள்ளிட்ட கணிசமான அழுத்தங்களையும் சவால்களையும் எதிர்வரும் தசாப்தத்தில் எதிர்கொள்ளவுள்ளது. அத்துடன் இந்த Digital சேவை வரியை ஓர் உள்நாட்டுப் பிரச்சினை என்றும் அவர் கூறினார்.
இதற்கிடையில், நேரடித் தடைகளைப் பொறுத்தவரை, மாகாண வர்த்தகத் தடைகளை நீக்குவது பெரும்பாலும் அடையாளப்பூர்வமானது என்று Karaguesian விளக்குகிறார். அனைத்து மாகாணங்கள் மற்றும் பிரதேசங்களுக்கு மிகவும் தடையாக உள்ள மாகாணங்களுக்கு இடையேயான வர்த்தகத் தடைகளை நீக்கினால், கனடாவின் பொருளாதாரம் மற்றும் உற்பத்தித்திறனை அதிகரிக்க மத்திய அரசு கொள்கைகளை ஊக்குவிக்க முடியும் என்றும் கூறுகின்றார்.