ஏப்ரல் 28 ஆம் திகதி நடைபெறும் கனடா பொதுத் தேர்தலில் லிபரல் மற்றும் கொன்சவேடிவ் கட்சிகளில் 5 தமிழர்கள் வேட்பாளர்களாக போட்டியிடுகின்றனர்.
லிபரல் கட்சிகளின் சார்பில் ஒக்வில்லே கிழக்கு தொகுதியில் அனிதாஆனந்த், ஸ்கார்பரோ-கில்ட்வுட்-ரூஜ் பார்க் தொகுதியில் ஹரி ஆனந்தசங்கரி, பிக்கரிங்–புரூக்ளின்
தொகுதியில் ஜுனிதா நாதன் ஆகியோர் போட்டியிடுகின்றனர்.
இதில் ஜுனிதா நாதன், மர்காம் நகரின் 7 ஆம் வட்டார உறுப்பினராக உள்ளார். கனடியர்கள் ஒரு புதிய அரசாங்கத்தை ஏப்ரல் 28 ஆம் திகதி தேர்ந்தெடுப்பார்கள். அனிதாஆனந்த், ஹரிஆனந்தசங்கரி இருவரும் கடந்த அரசாங்கத்தில் முக்கிய அமைச்சுப்பதவிகளை வகித்தவர்கள் என்பதும் குறிப்பிடத்தக்கது.
கொன்சவேடிவ் கட்சிகயின் சார்பில் இம்முறை இரண்டு தமிழர்கள் வேட்பாளர்களாக போட்டியிடுகின்றனர்.
அதன்படி, மார்க்கம் ஸ்டாஃப்வில்லே தொகுதியின் நிரான் ஜெயநேசன், மார்க்கம் தோர்ன்ஹில் தொகுதியில் லியோனல் லோகநாதன் கொன்சவேடிவ் கட்சிவேட்பாளராக இந்தத் தேர்தலை எதிர்கொள்கின்றனர்.