கனடா – ஒட்டாவாவில் ஆறு இலங்கையர்களை கொலை செய்த சம்பவம் தொடர்பில் மற்றுமொரு இலங்கையருக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
2024ஆம் ஆண்டு இடம்பெற்ற இந்தச் சம்பவம் ஒரு குடும்பத்தை சேர்ந்த மூவரும், வீட்டில் தங்கியிருந்த மற்றுமொரு இலங்கையரும் கொலை செய்யப்பட்டனர்.
குறித்த வீட்டில் தங்கியிருந்த ஃபெப்ரியோ டி சொய்சா என்ற சக இலங்கையரால் இந்த கொலை செய்யப்பட்டிருந்தது. கனடாவில் கல்வி கற்று வந்த அவர், இந்த குற்றத்தைச் செய்தபோது 19 வயதைக் கடந்திருந்தார்.
இந்நிலையில், குற்றச்சாட்டுகளை ஒப்புக்கொண்ட அவரருக்கு ஆயுள் தண்டனை விதித்து அந்நாட்டு நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
மேலும், தண்டனையில் எவ்விதமான தளர்வையும் பெறுவதற்கோ அல்லது விடுதலை பெறுவதற்கோ அவர் 25 ஆண்டுகள் கட்டாயமாகச் சிறைத் தண்டனையை அனுபவிக்க வேண்டும் என்று அறிவித்துள்ளது.
குறித்த இளைஞர் மீது நான்கு முதலாம் நிலை கொலைக் குற்றச்சாட்டுகளும், இரண்டு இரண்டாம் நிலை கொலைக் குற்றச்சாட்டுகளும், ஒரு கொலை முயற்சி குற்றச்சாட்டுகளும் சுமத்தப்பட்டிருந்தன.
இந்தக் குற்றச்சாட்டுகள் அனைத்தையும் ஃபெப்ரியோ டி சொய்சா ஒப்புக்கொண்டார்.
இந்த சம்பவத்தில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த தாயான தர்ஷனி பண்டாரநாயக்க (35), இனூக்க விக்கிரமசிங்க (07), அஷ்வினி விக்கிரமசிங்க (04), ரினியானா விக்கிரமசிங்க (02), கெலி விக்கிரமசிங்க (02 மாதம்) ஆகியோர் கொல்லப்பட்டனர்.
மேலும், அந்த வீட்டில் இருந்த காமினி அமரகோன் (40) என்ற நபரும் கொல்லப்பட்டதுடன், குழந்தைகளின் தந்தை படுகாயமடைந்தார்.
இந்தச் சம்பவம் அப்போது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

