16.6 C
Scarborough

கனடாவில் work permit விதிகளில் புதிய மாற்றம்: இனி Online முறை கட்டாயம்

Must read

கனடா அரசு வேலை அனுமதிகளை நாட்டின் எல்லைகளில் வழங்குவதை நிறுத்துவதாக அறிவித்துள்ளது.

இனி அனைத்து வேலை அனுமதி விண்ணப்பங்களும் மற்றும் நீட்டிப்புகளும் Immigration, Refugees and Citizenship Canada (IRCC) மூலமாக ஓன்லைனில் மட்டுமே செய்யப்பட வேண்டும்.

வெளிநாட்டைச் சேர்ந்தவர்கள் இனி எல்லைகளில் நேரடியாக வேலை அனுமதி (work permit) பெற முடியாது.

முதல் வேலை அனுமதியோ, நீட்டிப்போ ஓன்லைனில் மட்டுமே செய்ய வேண்டும்.

உங்கள் நீட்டிப்பு விண்ணப்பம் அங்கீகரிக்கப்படும் வரை நீங்கள் வேலை செய்ய முடியாது என்பதே இதன் பொருள்.

விண்ணப்ப செயல்முறை நடந்து கொண்டிருக்கும் போது வெளிநாட்டு குடியிருப்பாளர்கள் தற்காலிகமாக கனடாவில் தங்க முடியும்.

தற்காலிக குடியிருப்பு முடிவதற்கு முன்பு விண்ணப்பிக்க வேண்டும்.

ஆனால், அந்நிலையை இழந்தால், மீண்டும் அனுமதிக்கப்படவேண்டியது அவசியம்.

கனடாவில் தற்காலிக குடியிருப்பில் உள்ளவர்கள் வேலை அனுமதிக்காக அமெரிக்கா அல்லது St. Pierre and Miquelon பகுதிகளை சென்று மீண்டும் நாட்டுக்குள் வருவதை flagpoling என்று கூறுவர். இனி இந்த flagpoling முறை தடைசெய்யப்பட்டுள்ளது.

கனடாவை விட்டு வெளிநாட்டுக்கு செல்ல வேண்டிய டிரக் டிரைவர்களுக்கு இந்த விதி பொருந்தாது.

ஆனால், கனடாவுக்குள் மட்டுமே பணியாற்றும் டிரைவர்களுக்கு இந்த விதி பொருந்தும்.

கனடாவின் இந்த புதிய விதிகள் வேலை அனுமதி வழங்கும் முறையை சீர்செய்யவும், நுழைவு கட்டுப்பாடுகளை உறுதிப்படுத்தவும் கொண்டுவரப்பட்டுள்ளன.

வெளிநாட்டவர்கள் தற்போது கனடாவில் பணியாற்ற விரும்பினால், IRCC வழியாக ஓன்லைனில் விண்ணப்பிக்க வேண்டியது கட்டாயமாகிறது.

 

More articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest article