19.5 C
Scarborough

கனடாவில் முட்டை கொள்வனவு செய்வோருக்கு எச்சரிக்கை!

Must read

கனடாவில் முட்டை கொள்வனவு செய்வோருக்கு அவசர எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

பொதி செய்யப்பட்டு விற்பனை செய்யப்படும் சில வகை முட்டைகளில் சல்மொன்லா பக்றீரியா தாக்கம் ஏற்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

கனடிய உணவுப் பரிசோதனை முகவர் நிறுவனம் இது தொடர்பிலான எச்சரிக்கையை விடுத்துள்ளது.

சில வகை பண்டக் குறிகளைக் கொண்ட முட்டை வகைகளில் இந்த ஆபத்து காணப்படுவதாக எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

கொம்பிலிமன்ட்ஸ், போர்மோஸ்ட், கோல்டன் வெலி, ஐ.ஜீ.ஏ மற்றும் வெஸ்டர் பெமிலி போன்ற பண்டக் குறிகளைக் கொண்ட முட்டை வகைகளில் இவ்வாறு பக்றீரியா தொற்று ஆபத்து காணப்படுவதாக எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

பிரிட்டிஸ் கொலம்பியா, மானிடோபா மற்றும் ஒன்றாரியோ போன்ற மாகாணங்களில் இவ்வாறு பாதிப்பிற்கு உள்ளான முட்டை வகைகள் விற்பனை செய்யப்பட்டிருக்கலாம் என சந்தேகம் வெளியிடப்பட்டுள்ளது.

இந்த வகை முட்டைகள் சந்தையிலிருந்து மீளப் பெற்றுக்கொள்ளப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

முட்டை கொள்வனவு செய்தவர்கள் மற்றும் அதனை நுகர்வோர் அவதானத்துடன் இருக்குமாறு அறிவுறுத்தல் வழங்கப்பட்டுள்ளது.

More articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest article