13.9 C
Scarborough

கனடாவில் மின்னல் தாக்கி உயிர் பிழைத்த இளம்பெண்

Must read

கனேடிய நகரமொன்றில் மின்னல் தாக்கியும் இளம்பெண்ணொருவர் உயிர் பிழைத்த அதிசயம் ஒன்று நிகழ்ந்துள்ளது.

வியாழக்கிழமை மாலை 4.10 மணியளவில், கனடாவின் ஆல்பர்ட்டா மாகாண தலைநகரான எட்மண்டனில் வாழும் Laura Penner என்னும் இளம்பெண்ணும் 21 வயதுடைய அவரது தோழியும் வீடு திரும்பிக்கொண்டிருந்திருக்கிறார்கள்.

லாரா வீட்டுக்குச் செல்ல, அவரது தோழி சாலையைக் கடந்து மறுபக்கம் உள்ள பேருந்து நிறுத்தத்துக்குச் சென்றுள்ளார்.

அன்று மதியம் முதலே அப்பகுதியில் இடியுடன் மழை பெய்துகொண்டிருந்திருக்கிறது.

லாரா வீட்டுக்குள்ளிருந்து தன் தோழியைப் பார்த்துக்கொண்டிருக்க, திடீரென ஒரு ஒளி வானத்திலிருந்து அவரைச் சூழ்ந்துகொண்டதையும், அவர் தரையில் விழுந்ததையும் கண்டு அதிர்ச்சியடைந்துள்ளார்.

அதாவது, லாராவின் தோழியை மின்னல் ஒன்று தாக்கியுள்ளது.

உடனே லாராவும் அவரது குடும்பத்தினரும் அந்தப் பெண்ணை நோக்கி ஓட, லாராவின் குடும்பத்தினர் அவருக்கு உயிர் காக்கும் சிகிச்சை அளிக்க, லாரா அவசர உதவியை அழைத்துள்ளார்.

அப்போது அங்கு ஒரு பேருந்து வர, அந்தப் பேருந்திலிருந்த மார்ட்டி (Marty Heemeryck) என்பவரும் தரையில் ஒரு பெண் விழுந்து கிடப்பதைக் கண்டு அவருக்கு உதவ பேருந்திலிருந்து இறங்கி ஓட, ஒரு கூட்டமே அவரை சூழ்ந்துகொண்டுள்ளது.

மார்ட்டி, தான் அந்தப் பெண்ணுக்காக பிரார்த்தனை செய்துகொண்டே இருந்ததாக தெரிவிக்கிறார்.

சிறிது நேரத்தில் மருத்துவ உதவிக்குழுவினர் அங்கு வர, உடனடியாக அவர் மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டுள்ளார்.

அவரை கோமா நிலைக்குக் கொண்டு சென்றுள்ள மருத்துவர்கள், அவர் உடலில் மின்னல் தாக்கியதால் ஏற்பட்டுள்ள தீக்காயங்களுக்கு சிகிச்சை அளித்துவருகிறார்கள்.

அவர் கோமா நிலையிலிருப்பதால், அவரது ஒப்புதல் கிடைக்காததால், அவரது பெயர் வெளியிடப்படவில்லை.

இதற்கிடையில், கனடாவில் சராசரியாக ஆண்டொன்றிற்கு இரண்டு முதல் மூன்று மரணங்களும், சுமார் 180 காயம் ஏற்படுத்தும் சம்பவங்களும் மின்னல் தாக்குவதால் ஏற்படும் நிலையில், லாராவின் தோழி உயிர் பிழைத்தது அதிசயம்தான் எனலாம்!

 

More articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest article