7.8 C
Scarborough

கனடாவில் ‘தட்டம்மை’வைரஸ் பரவும் அபாயம்

Must read

மொன்றியல் நகரின் பல முக்கிய இடங்களில் ‘தட்டம்மை’ (Measles) வைரஸ் பரவியிருக்கக்கூடும் எனப் பொது சுகாதாரத் துறை இன்று அவசர எச்சரிக்கை விடுத்துள்ளது.

கியூபெக் மாகாணத்தில் இதுவரை 8 பேருக்கு தட்டம்மை உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில், வைரஸ் பாதிப்புள்ள நபர்கள் சென்ற இடங்களின் பட்டியலை அதிகாரிகள் வெளியிட்டுள்ளனர்.

ஒரு அறையில் பாதிப்புள்ள நபர் இல்லாவிட்டாலும் கூட, அவர் விட்டுச் சென்ற தட்டம்மைக் கிருமிகள் 2 மணிநேரம் வரை காற்றில் உயிர்வாழும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தட்டம்மை பரவலைக் கட்டுப்படுத்தப் பொதுமக்கள் முழு ஒத்துழைப்பு வழங்குமாறு மொன்றியால் சுகாதாரத் துறை கேட்டுக்கொண்டுள்ளது.

More articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest article