கனடாவில் டெஸ்லா வாகனங்களின் விலைகளை 21 சதவீதம் வரை அதிகரித்துள்ளது.
கனடா அரசு அமெரிக்காவிலிருந்து இறக்குமதி செய்யும் வாகனங்களுக்கு 25 சதவீதம் வரி விதித்ததைத் தொடர்ந்து, இந்த விலை உயர்வு ஏற்பட்டுள்ளது.
Model 3 Long Range AWD இப்போது 79,990 டொலராக விற்பனை செய்யப்படுகிறது, இது முந்தைய விலையான 68,990 டொலருடன் ஒப்பிடுகையில் 10,000 டொலர் அதிகம்.
Model 3 Performance-ன் விலையும் 79,990 டொலரிலிருந்து 89,990 டொலராக உயர்ந்துள்ளது. Model 3 Rear-Wheel Drive மொடல் தற்போது விற்பனைக்கு இல்லையென குறிப்பிடப்பட்டுள்ளது.
இப்போது 84,990 டொலராகும் – முன்னதாக இதன் விலை 69,990 டொலராக இருந்த நிலையில், தற்போது 15,000 டொலர் அதிகரித்துள்ளது.
மேலும், உயர்நிலை மொடல்களின் விலையும் கூடியுள்ளது:
Model S – $133,990 (+$19,000)
Model S Plaid – $154,990 (+$18,000)
Model X AWD – $140,990 (+$19,000)
Model X Plaid – $161,990 (+$19,000)
Cybertruck-ல் மிகப்பெரிய விலை உயர்வு ஏற்பட்டுள்ளது:
All-Wheel Drive – $139,990 (+21.7%)
Cyberbeast – $167,990 (+21.7%)
டெஸ்லா, தற்போதைய விலைவாசியை சமாளிக்க விரும்பும் வாடிக்கையாளர்களுக்கு “வரிவிதிப்பிற்கு முந்தைய விலை” கொண்ட இன்வெண்டரி வாகனங்களை வாங்க ஊக்குவிக்கிறது. இது புதிய ஆர்டர்களை விட கணிசமான சலுகையுடன் கிடைக்கும்.