கனடாவில் டென்னிஸ் வீரர் ஓருவரின் உயிரை மனிதாபிமான அடிப்படையில் காப்பாற்றிய ஐந்து பேருக்கு வீரத்திற்கான விருதுகள் வழங்கப்பட்டுள்ளன.
பிரிட்டிஷ் கொலம்பியாவின் ரிச்மண்டில் கடந்த கோடை காலத்தில் மயங்கி விழுந்த டென்னிஸ் வீரர் ஒருவரின் உயிரைக் காப்பாற்றிய குழுவொன்றுக்கு இவ்வாறு விருது வழங்கப்பட்டுள்ளது.
ஜூலை 5ஆம் திகதி பிரையன் சீ (Brian Seay) எனும் டென்னிஸ் வீரர் மைதானத்தில் மாரடைப்பு காரணமாக விழுந்த போது, ஐந்து பேர் உடனடியாக ஓடி வந்து உதவினர்.
அவர்கள் பிரையனை மயக்க நிலையில், மூச்சில்லாமல், இதயத் துடிப்பின்றி இருந்ததை கண்டனர் என்று பிரிட்டிஷ் கொலம்பிய அவசர மருத்துவ பிரிவு தெரிவித்துள்ளது.
அவர்கள் உடனடியாக 911க்கு அழைத்ததுடன், அவசர முதலுதவி செய்து, டெஃபிப்ரில்லேட்டரை (defibrillator) பயன்படுத்தினர்.
உடன் விரைந்து செயற்பட்டதனால் உயிர்காப்பு வீரர்கள் சம்பவ இடத்திற்கு வருவதற்கு முன்னதாகவே பிரையனின் இதயத் துடிப்பு மீண்டும் செயற்படத் தொடங்கியது.
இந்த நற்பண்புகள் கொண்டவர்களின் உடனடி செயல் இல்லையெனில் அவர் இன்று உயிருடன் இருக்க முடியாது என பிரையனின் மனைவி ரே சீ (Rae Seay) தெரிவித்துள்ளார்.
உயிரை மீட்டவர்களுக்கு என்றென்றும் நன்றிக் கடன் பட்டுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.
பிரையன் தொடர்ந்தும் மருத்துவ கண்காணிப்பில் சிகிச்சை பெற்று வருகின்றார் என்பது குறிப்பிடத்தக்கது.
canadamirror

