கனடாவில் சட்டவிரோத கரடி வேட்டையில் ஈடுபட்ட சுற்றுலா விடுதிகளுக்கு நீதிமன்றம் அபராதம் விதித்துள்ளது.
வடமேற்கு ஒன்டாரியோவில் கருப்பு கரடி வேட்டையாடல் தொடர்பான சட்ட மீறலுக்கு ஐந்து சுற்றுலா விடுதிகள் மீது மொத்தம் $64,000 அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.
ஒன்டாரியோ நீதிமன்றத்தில் விசாரிக்கப்பட்ட வழக்கில், டிம்பர்லேன் லாஜ் நிறுவனம் அனுமதி இல்லாமல் கருப்பு கரடி வேட்டைச் சான்றிதழ்களை பிற விடுதிகளுக்கு விற்பனை செய்தமை உறுதிசெய்யப்பட்டது.
இதன் மூலம் வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் சட்டவிரோத வேட்டைகளில் ஈடுபட்டமை நிரூபிக்கப்பட்டது.
இதன் அடிப்படையில் டிம்பர்லேன் லாஜ் மீது 17,500 டொலர் அபராதம் விதிக்கப்பட்டது.
அதேபோல், கனடா நார்த் லாஜ் (2018) மீது 23,000 டொலர், லிட்டில் கனடா கேம்ப் மீது 12,000 டொலர், மற்றும் ராகி ஷோர் அட்வென்சர்ஸ் மீது 10,000 டொலர் அபராதம் விதிக்கப்பட்டது.
மேலும், கபீலோ லாஜ் இன்க். தனது உரிமம் விதிமுறைகளை மீறி வெளிநாட்டு பயணிகளுக்கான சட்டவிரோத கரடி வேட்டை நடத்த அனுமதித்ததாக நீதிமன்றம் கண்டறிந்து 1,500 டொலர் அபராதம் விதித்தது. இந்த வழக்குகள் 2024 மற்றும் 2025-இல் கெனோரா மற்றும் ரெட் லேக் நீதிமன்றங்களில் விசாரிக்கப்பட்டன.