19.5 C
Scarborough

கனடாவில் இஸ்லாமிய குடும்பம் கொல்லப்பட்ட விவகாரம்: குற்றவாளி மேல்முறையீடு!

Must read

கனடாவில், நடைபாதையில் நடந்து சென்றுகொண்டிருந்த இஸ்லாமிய குடும்பத்தின்மீது வேண்டுமென்றே வேனை மோதிக் கொன்ற நபர், தனக்கு விதிக்கப்பட்ட தீர்ப்பை எதிர்த்து மேல்முறையீடு செய்துள்ளார்.

2022ஆம் ஆண்டு, ஜூன் மாதம் 6ஆம் திகதி, கனடாவில்ஒன்ராறியோவிலுள்ள லண்டன் பகுதியில், சல்மான் அஃப்சால் (46), அவரது மனைவி மதிகாசல்மான் (44), தம்பதியரின் மகள் யும்னா சல்மான் (15), மகன் ஃபயெஸ் அஃப்சால் (9), மற்றும் அஃப்சாலின் தாயார் ஆகியோர் நடைபாதையில் நடந்து சென்றுகொண்டிருந்தார்கள். கனடா வீட்டு உபயோகப் பொருட்கள்

அப்போது, நத்தானியேல் (Nathaniel Veltman, 20) என்ற நபர் வேண்டுமென்றே தனது வேனைக்கொண்டு அவர்கள் மீது மோதினார்.

வேன் மோதியதில், சல்மான் அஃப்சால், அவரது மனைவி மதிகா, மகள் யும்னா, மற்றும், 74 வயதாகும் அஃப்சாலின் தாய் ஆகியோர் கொல்லப்பட்டனர்.

தம்பதியரின் மகன் ஃபயெஸ், படுகாயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டான்.

சம்பந்தப்பட்டவர்கள் இஸ்லாமியர்கள் என்பதால், அவர்கள் மீதான வெறுப்பு காரணமாக நத்தானியேல் வேனைக்கொண்டு வேண்டுமென்றே அவர்கள் மீது மோதியதாக பொலிசார் தெரிவித்திருந்தார்கள்.

இந்த வழக்கில், 2024ஆம் ஆண்டு, ஜனவரி மாதம் தீர்ப்பு வழங்கப்பட்டது.

இந்நிலையில், தற்போது நத்தானியேல் தனக்கு விதிக்கப்பட்ட தீர்ப்பை எதிர்த்து மேல்முறையீடு செய்துள்ளார்.

இது குறித்து ஊடகவியலாளர்களிடம் விளக்கிய நத்தானியேலின் சட்டத்தரணியான ஸ்டீபன் (Stephen Whitzman), இந்த குற்றத்தால் பாதிக்கப்பட்ட முடும்பத்தினரும், சம்பந்தப்பட்ட சமுதாயத்தினரும் அதிர்ச்சியும் வருத்தமும் அடைந்துள்ளதை அறிவோம்.

அவர்களுடைய உணர்வுகளை நாங்கள் மதிக்கிறோம். அதே நேரத்தில், நத்தானியேலுக்கு மேல்முறையீடு செய்வதற்கு சட்டப்படி உரிமை உள்ளது.

அதற்கு நான் உதவி செய்ய இருக்கிறேன். ஆகவே, இரு தரப்பினரும் அதை புரிந்துகொள்வார்கள் என நம்புகிறேன் என ஸ்டீபன் குறிப்பிட்டுள்ளார்.

More articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest article