13.6 C
Scarborough

கனடாவில் அரசாங்கத்திற்கும் ஆசிரியர்களுக்கும் இடையில் மோதல்!

Must read

கனடாவின் அல்பர்டா மாகாண அரசு மற்றும் அதன் 51,000 ஆசிரியர்களுக்கு இடையிலான தகராறு தீவிரமடைந்துள்ளது.

இரு தரப்பும் ஒருவரை ஒருவர் பொய் கூறுவதாக குற்றம் சாட்டி வருகின்றன.

ஆசிரியர் சங்கம் (ATA) நடத்திய பல வாரங்களாக நீடிக்கும் பிரச்சாரத்துக்கு எதிராக அரசு தனது தரப்பை விளக்க விளம்பர இயக்கம் தொடங்க உள்ளதாக நிதியமைச்சர் நேட் ஹோர்னர் அலுவலகம் புதன்கிழமை உறுதிப்படுத்தியது.

அரசு இன்னும் எந்த ஊடகங்களில் விளம்பரங்கள் வரும், செலவுகள் எவ்வளவு, எந்த நாளில் தொடங்கப்படும் என தீர்மானித்து வருகிறது.

விரைவில் விவரங்கள் அறிவிக்கப்பட உள்ளது. ஆசிரியர் சங்கம் ஒக்டோபர் 6-ம் திகதி வேலைநிறுத்த எச்சரிக்கை விடுத்துள்ளது.

ஒப்பந்தம் இல்லை என்றால் 2,500 பள்ளிகளில் 7 இலட்சத்துக்கும் மேற்பட்ட மாணவர்களின் வகுப்புகள் பாதிக்கப்படும். ஆசிரியர் சம்பள உயர்வு, வகுப்பறை நெரிசல் குறைப்பு என்பன குறித்து கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

அரசு மூன்று ஆண்டுகளில் 3,000 ஆசிரியர்களை நியமிப்பது, பில்லியன் டாலர் மதிப்பிலான புதிய பள்ளிகள் அமைப்பது, மேலும் நான்கு ஆண்டுகளுக்கு 12% சம்பள உயர்வு வழங்குவது என முன்மொழிந்துள்ளது.

எனினும் இந்த சலுகை போதுமானதல்ல, நெரிசலை சரி செய்யவில்லை என ஆசிரியர் சங்கங்கள் தெரிவித்துள்ளன.

More articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest article