கனடாவின் உள்நாட்டு விவகாரங்களில் தனக்கு நாட்டமில்லை என சீனா, தெரிவித்துள்ளது.
கனடாவில் அடுத்த மாதம் 28ஆம் திகதி பொதுத் தேர்தல் இடம்பெறும் என பிரதமர் மார்க் கார்னி, தெரிவித்த நிலையில் கனடாவின் பொதுத் தேர்தலில் அந்நியத் தலையீடுகள் இருக்கக்கூடும் என கனடா கூறியிருந்தது.
அதோடு சீனா, செயற்கை நுண்ணறிவுத் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தித் தேர்தலில் தலையிடும் சாத்தியம் அதிகம் என்று கனடிய பாதுகாப்பு உளவு சேவைப் பிரிவு ஏற்கெனவே குறிப்பிட்டிருந்தது.
இந்நிலையில் கனடாவின் கருத்துக்கு பதிலளிக்கும் வகையில் சீனாவின் கருத்து வந்துள்ளது. அதேவேளை இந்தியா, ரஷ்யா, பாகிஸ்தானும் தேர்தலில் தலையிடக்கூடும் என்றும் கனடா தெரிவித்திருந்தது.