16.1 C
Scarborough

கடலில் ஐம்பது அடி ஆழத்தில் திருமணம் செய்துகொண்ட ஜோடி!

Must read

புதுச்சேரி கடலில் 50 அடி ஆழத்தில் காதல் ஜோடி ஒன்று திருமணம் செய்து கொண்டது. கடல் தண்ணீருக்குள் நீச்சலடித்தபடி இருவரும் மோதிரம் மாற்றி திருமணம் செய்து கொண்டுள்ளனர். திருமணத்துக்கு பிறகு அவர்கள் கூறிய தகவல் அனைவரையும் கவனிக்க வைத்துள்ளது.

இவ்வாறு திருமணம் செய்து கொண்ட ஜோடியின் பெயர் அரவிந்த் தருண்_ஸ்ரீ – தீபிகா. இதில் அரவிந்த் தருண்ஸ்ரீ சென்னை மற்றும் புதுச்சேரியில் டெம்பிள் அட்வென்சர் என்ற ஆழ்கடல் பயிற்சி நிறுவனத்தை நடத்தி வருகிறார். தீபிகா ஆழ்கடல் பயிற்சியாளராக உள்ளார். இவர்கள் 2 பேரும் காதலித்து வந்தனர்.

அதேபோல் இருவருக்கும் இயற்கை மீதான காதல் என்பது அதிகம். இதனால் காற்று மாசுவை தடுக்கவும், காற்றின் முக்கியத்துவத்தை உணர்த்தும் வகையில் பாரா கிளைடிங் செய்து இந்த ஜோடி இதற்கு முன்பு விழிப்புணர்வு ஏற்படுத்தியது. இதன் அடுத்தப்படியாக கடல் மாசுபடுவதை தடுத்து, கடல்வாழ் உயிரினங்களை பாதுகாப்பதன் அவசியத்தை உணர்த்தும் வகையில் கடலுக்கடியில் திருமணம் செய்துள்ளனர்.

புதுச்சேரியில் இருந்து 5 கிலோமீட்டர் தூரத்தில் 50 அடி ஆழத்தில் இவர்களின் திருமணம் நடந்தது. இருவரும் திருமணத்துக்கான உடை, மாலை அணிந்து கடலில் குதித்தனர். அதன்பிறகு கடலுக்கடியில் இருவரும் மோதிரம் மாற்றி திருமணம் செய்து கொண்டனர்.

 

More articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest article