மூச்சுக்குழாயில் வேர்க்கடலை சிக்கியதால் ஒன்றரை வயதுக் குழந்தை உயிரிழந்துள்ளது.
இச்சம்பவம் யாழ்ப்பாணம், சுன்னாகம் பகுதியில் இடம்பெற்றுள்ளதுடன் சுன்னாகம், ஐயனார் வீதியைச் சேர்ந்த சசிதரன் டனியா என்ற குழந்தையே இவ்வாறு உயிரிழந்துள்ளது.
நேற்றுமுன்தினம் மாலை குழந்தை வேர்க்கடலை உண்ட நிலையில் குழந்தைக்குப் புரக்கேறியுள்ளது. அதன்பின்னர் குழந்தை இயல்புக்குத் திரும்பியது. இருப்பினும் நேற்று அதிகாலை குழந்தை அழுது வாந்தி எடுத்ததை அடுத்து மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டது. ஆயினும் நேற்று அதிகாலை குழந்தை உயிரிழந்தது.
சுவாசக்குழாயில் வேர்க்கடலை சிக்கியதாலேயே இறப்பு சம்பவித்துள்ளமை உடற்கூற்றுப் பரிசோதனையில் கண்டறியப்பட்டுள்ளது.
இறப்பு விசாரணைகளை திடீர் இறப்பு விசாரணை அதிகாரி ஆ.ஜெயபாலசிங்கம் மேற்கொண்டார்.