பலஸ்தீன அகதிகளுக்கான மீட்புப் பணிகளை ஐ. நா. மேற்கொள்ளலாம் என்று இஸ்ரேல் பிரதமர் தெரிவித்துள்ளார்.
மத்திய கிழக்கில் பலஸ்தீன அகதிகளுக்கான ஐ. நா. மீட்புப் பணிகள் முகாமை (UNRWA) சட்டத்தை உடனடியாக அமுல்படுத்த இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு நேற்று (17) அறிவுறுத்தியுள்ளார்.
இது குறித்து இஸ்ரேல் பிரதமர் அலுவலகம் தரப்பில் வெளியிட்டுள்ள பதிவில்,
இஸ்ரேல் அமைச்சரவையில் ஒருமித்த கருத்துடன் எடுக்கப்பட்டுள்ள இந்த முடிவை அமுல்படுத்த எவ்வித தடையும் இல்லை என்று கூறப்பட்டுள்ளது.
ஐ. நா. வின் இந்த முகாமை கடந்த பல ஆண்டுகளாக பலஸ்தீன அகதிகளுக்கு அதிலும் குறிப்பாக, இஸ்ரேல் ஆக்கிரமிப்பிலுள்ள மேற்கு கரை, காஸா உள்ளிட்ட பலஸ்தீன மக்கள் வசிக்கும் பகுதிகளில் அத்தியாவசிய தேவைகளையும் மனிதாபிமான உதவிகளையும் வழங்கி சேவையாற்றி வந்தது குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில், இஸ்ரேல் பாராளுமன்றமான ‘நெசெட்’ கடந்த வருடம் ஒக்டோபரில் இரு சட்டங்களைப் பிறப்பித்தது. அதன்படி, இஸ்ரேல் கட்டுப்பாட்டிலுள்ள பகுதிகளில் மத்திய கிழக்கில் பலஸ்தீன அகதிகளுக்கான ஐ. நா. மீட்புப் பணிகள் முகாமை செயல்படத் தடையும் பிறப்பிக்கப்பட்டது.
இதற்கு ஐ. நா. தரப்பு எதிர்ப்பு தெரிவித்திருந்த நிலையில், பலஸ்தீன அகதிகளுக்கான மீட்புப் பணிகளை ஐ. நா. மேற்கொள்ளலாம் என்று இஸ்ரேல் பிரதமர் தெரிவித்துள்ளார்.